வியாழக்கிழமை, மே 21
Shadow

டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது சசிகுமாரின் ‘கொடி வீரன்’

 

சசிகுமார் நடித்துள்ள ‘கொடி வீரன்’ படம், 7ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘கொடி வீரன்’. பூர்ணா, மகிமா நம்பியார், சனுஷா என மூன்று ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சசிகுமார், தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால் வருகிற 30ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சசிகுமாரின் அத்தை மகனும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார், கடந்த வாரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து , அன்புச்செழியன் தலை மறைவானார். அவர்  மீது வழக்குப்பதிவு செய்திருந்த போலீஸார், அவரைத் தேடி வருகின்றனர். இந்த சூழலில் தமிழ் திரையுலகில் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக ஒரு அணியும், அவருக்கு எதிராக ஒரு அணியும் பரபரப்பாக கருத்து சொல்லி வருகிறார்கள்.  இந்நிலையில், அசோக்குமார் எந்த படம் ரிலீஸ் ஆகாமல் கடன் சிக்கலில் மாட்டிக்கொண்டது என பயந்து தற்கொலை செய்து கொண்டாரோ அந்த படமான  ‘கொடி வீரன்’  டிசம்பர்  7ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பைனான்சியர் அன்புச்செழியன் தனக்கு தரவேண்டிய பணத்துக்கு ஈடாக கொடிவீரன் ரிலீஸ் செய்ய முடியாதபடி லாக் செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு இதன் மூலம் உடைக்கப்பட்டுள்ளது.

அப்படியிருக்க சசிக்குமார் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு எது காரணம்…?????

அல்லது சிக்கலில் மாட்டிக்கொண்டதால் பணமே வேண்டாம் என அன்புச்செழியன் விலகிக் கொண்டாரா..????

சினிமாவை மிஞ்சும் திடுக் கிளைமாக்ஸ் நகர்வுகளாக கோடம்பாக்க நிஜ நிலவரம் செல்கிறது.

 

483 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன