திங்கட்கிழமை, மே 13
Shadow

ரூ.8 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தக்காரர் மீது வெறும் ரூ.35,000 மின்சாரம் திருடியதாக போலீசார் வழக்கு!

ரூ.8 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தக்காரர் மீது வெறும் ரூ.35,000 மின்சாரம் திருடியதாக போலீசார் வழக்கு!

இந்த வாரம் ரோல்ஸ் ராய்ஸ் கார் உரிமையாளர்களுக்கு போதாத காலம் போல, நேற்று தான் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி வழக்கு தொடர்ந்ததற்காக நடிகர் விஜய்-க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மேலும் ஒரு ரோல்ஸ் ராய் உரிமையாளர் சிக்கலில் சிக்கி சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறார்.

 

ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க கார்களாக, கார்களின் அரசனாகவும் வர்ணிக்கப்படுபவை. கோடிக்கணக்கான விலை மதிப்பு கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருப்பவர்களும் மதிப்புமிக்கவர்களாகவே இருக்க வேண்டும் என்பதும் அந்த நிறுவனம் வகுத்திருக்கும் விதி. தங்கள் கார்களை வைத்திருப்பவர்களும் செல்வாக்கானவர்களாக இருக்க வேண்டும் என அந்நிறுவனம் கருதுகிறது.

இந்நிலையில் 8 கோடி ரூபாய் விலை கொண்ட ரோல்ஸ் கார் வாங்கிய ஒருவர், வெறும் 35,000 மதிப்பு கொண்ட மின்சாரத்தை திருடியதாக காவல்துறையினரிடம் சிக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் கெய்க்வாட், சிவசேனா கட்சி பிரமுகரான இவர், கட்டுமான நிறுவனமும் நடத்தி வருகிறார்.

சஞ்சய் கெய்க்வாட் மீது மின்சாரம் திருடியதாக மகாராஷ்டிர மின் பகிர்மான நிறுவனம் அவர் மீது கடந்த வாரம் கொல்சேவாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. மகாராஷ்டிர மின் பகிர்மான நிறுவன கூடுதல் செயற்பொறியாளர் அசோக் புந்தே என்பவர் 3 மாதங்களுக்கு முன் சஞ்சய் கெய்க்வாட்டின் கட்டிட பணி நடைபெறும் பகுதியில் சென்று சோதனை நடத்திய போது, அங்கு 34,840 ரூபாய் மதிப்புள்ள மின் திருட்டு நடந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து சஞ்சய் கெய்க்வாட்-க்கு 15,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

மூன்று மாதங்களை நிலையில் சஞ்சய் கெய்க்வாட் அபராதத் தொகையை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக நிலுவைத்தொகையும், அபராதத்தொகையையும் சேர்த்து செலுத்தியிருக்கிறார் சஞ்சய் கெய்க்வாட்.

இருப்பினும், மகராஷ்டிர மின்வாரியம் தன் மீது வேண்டுமென்றே பொய் புகார் அளித்திருப்பதாக கூறும் சஞ்சய் கெய்க்வாட், தான் மின் திருட்டில் ஈடுபட்டிருந்தால் எதற்காக என்னுடைய மின் மீட்டர்களை எடுத்துச் செல்லவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிறுவனத்தில் இருந்து குழு ஒன்று சஞ்சய் கெய்க்வாட்டிற்கு சொந்தமான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த குழு ஆராய்ந்ததில், அங்கு அதிகாரப்பூர்வ மின்சார அளவீட்டு கருவிகள் இல்லாததையும், இதன் மூலம் அவர்கள் மின் திருட்டில் ஈடுப்பட்டு வந்ததையும் கண்டுப்பிடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

124 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன