வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

’வாழ்’ கோடங்கி திரை விமர்சனம்

 

’வாழ்’ திரை விமர்சனம்

மனித வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் போராடிக்கொண்டே வாழ்கிறான்.

அப்படி ஒரு மிஷின் வாழ்க்கையில் வாழும் கதை நாயகன் ப்ரதீப் ஒரு நாள் அவரே எதிர்ப்பார்க்காத ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவர் சந்தித்த மக்கள், இடங்கள், அனுபவங்களே இப்படத்தின் வாழ் பட கதை.

அருவி மூலம் இப்படியும்கதை சொல்ல முடியும் என தமிழ் திரையுலகைதிரும்பிப்பார்க்க வைத்த இயக்குனர் அருண் பிரபுவின் அடுத்த படைப்புதான் இந்த வாழ்.

சிவகார்த்திகேயன் படத்தைதயாரிக்க முன் வந்த போதே ஒரு எதிர் பார்ப்பு இருந்தது.

உலக சினிமாக்களில் இது போன்ற ட்ராவல் கதைகள் நிறைய வந்துள்ளது.

அதேபோல் ஒரு ட்ராவல் கதை என்றாலும் அதை நம் தமிழுக்கு ஏற்றது போல் மாற்றி நமக்கு காட்டிய விதம் நன்று. படத்தின் நாயகன் ப்ரதீப் கண்டிப்பாக வரவேற்க கூடிய டேலண்ட், அவரின் கதாபாத்திரத்தை அருமையாக நடித்துள்ளார்.

முதல் பாதியில் பானுவும், இரண்டாம் பாதியில் திவாவும் என 2 நாயகிகளும்  நடிக்கிறது தெரியாமலேயே யதார்த்தமாக வலம் வருகிறார்கள்.  ‘குட்டி பையன்’ யாத்ரா அருமையான கேரக்டர்.

படத்தின் மிகப்பெரிய பலமாக பார்ப்பது , ஒளிப்பதிவு,  இசை.

யதார்த்தமான வசனங்கள். ப்ரதீப் குமார் பின்னணி இசை நம்மையும் கூடவே பயணிக்க் வைக்கிறது. .

இதையெல்லாம் விட ஷெல்லி கலிஸ்ட்டின்  ஒளிப்பதிவு அத்தனை அழகு. படம் முழுக்க நாமே ஹீரோவுடன் பயணம் செய்வது போன்ற ஒரு புது அனுபவம், இத்தனை ப்ளஸ் இருந்தும் படத்தில் குறையாக தெரிவது திரைக்கதை தான்.

டார்க் காமெடின்னு சொல்ற சில விஷயங்கள் எடுபட்டாலும் பல காட்சிகள் தனித்தனியாக அழகாக இருக்கிறது. ஆனால், இந்த படத்துக்கும் அந்த காட்சிகளுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் புரியாத புதிர்,

இதன் காரணமாகவே படத்தோடு ஒன்றி பார்க்க முடியாமல் இருக்கிறது, இரண்டாம் பாதி மிகப் பெரிய விஷ்வல் ட்ரீட்டாக இருந்தாலும், அழுத்தமான காட்சிகள் இல்லாதது சலிப்படைய செய்கிறது.

அதோடு, கொலை, கள்ளக்காதல், விபத்து என அடுத்தடுத்து  பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு அதை ஹேண்டில் செய்யவும் முடியாமல், போலீஸிடமும் எந்த விளக்கமும் சொல்லாமல்,  தப்பியோடும் ஒரு கைதி, ஊர் ஊராக சுற்றுவது அத்தனை சாத்தியமா? நம்மூர் போலீஸ் அத்தனை நாள் விட்டு வைக்குமா? இப்படி ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.

இந்த லாஜிக் ஓட்டைகளை கவனிக்காமல் காட்சிகளிலும், பின்னணி இசையிலும் நம்மை கவனிக்க வைத்து ஸ்கோர் எடுத்துக் கொள்கிறார் இயக்குனர் அருண்.

 

மொத்தத்தில் வாழ் ஒருமுறை பார்க்கலாம்!

 

592 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன