வியாழக்கிழமை, ஆகஸ்ட் 5
Shadow

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்!

பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் களப்பணியாற்றத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் நிலவி வருகிறது.
பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கிற்கு எதிராக செயல்பட்டு வரும் நவ்ஜோத் சிங் சித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசி இருந்தார்.
இதற்கிடையே, சமீபத்தில் டெல்லி சென்ற பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அமரீந்தர் சிங், பஞ்சாப்பை பொறுத்தவரை சோனியா எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
64 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

nineteen − sixteen =