புதன்கிழமை, மே 15
Shadow

ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை ஸ்டெர்லைட் ஆலைக்கு நீட்டிக்க எதிர்ப்பு!

ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை ஸ்டெர்லைட் ஆலைக்கு நீட்டிக்க எதிர்ப்பு!

 

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை 31 ஆம் தேதியோடு நிறுத்த வேண்டும் என்றும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது, என்றும் கூறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்ப்பு குழுவினர் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது

 

இந்த நேரத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சார்பில் இலவசமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருகிறோம் என்று, நீதிமன்றத்தில்  வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதில் ஏப்ரல் மாத கடைசி முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது நீதிமன்றம் அளித்த காலக்கெடு இந்த மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில்

 கொரோனா மூன்றாவது அலையை காரணம் காட்டி ஸ்டெர்லைட்  ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன்  உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்த நிலையில்  ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  இன்று போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை 31 ஆம் தேதியோடு நிறுத்த வேண்டும் என்றும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்

எக்காரணம் கொண்டும் ஜூலை 31-க்கு பிறகு ஸ்டெர்லைட் இயங்க அனுமதிக்க கூடாது, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நிர்வாகிகள் சிலர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கை மனு அளித்தனர்.

260 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன