வியாழக்கிழமை, ஆகஸ்ட் 5
Shadow

கேரளாவில் துபாய் பதிவெண்ணில் ஹாயாக வலம் வந்து போலீசில் சிக்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்!

 

கேரளாவில் துபாய் பதிவெண்ணில் ஹாயாக வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்!

தமிழ் நாட்டில் இப்பதான் நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு, அபராதம் வாங்கினார். அந்த விவகாரம் பெரிய சலசலப்பை ஏற்படுத்த விஜய் இப்ப உச்ச நீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்கு போயிருக்கார்.

இந்த பரபரப்பு முடிவதற்குள் மகராஷ்டிராவில் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவர் மின்சார திருட்டில் ஈடுபட்டு சிக்கி அபராதம் கட்டினார்.

இந்த சூழலில், கேரளாவில் துபாய் பதிவெண்ணில் ஹாயாக  வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மாநில மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த போலீஸார் சிறை பிடித்த சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இங்குதான் துபாய் பதிவெண் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மோட்டார் வாகன துறை போலீஸ் ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி காட்டியிருக்கின்றனர்.

நுழைவு வரியை செலுத்தாத காரணத்தினாலேயே கேரள மோட்டார் வாகனத்துறையினர் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு அபராதம் வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதனை செலுத்த துபாய் பதிவெண் கொண்ட அக்கார் தவறியிருக்கின்றது. ஆய்வின்போது இதனைக் கண்டறிந்த போலீஸார் ரூ. 35 ஆயிரத்திற்கான அபராத ரசீதை வழங்கியிருக்கின்றனர்.

கேரள போலீஸார் அபராதம் விதித்திருக்கும் காரானது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலாகும். இந்த காரின் புதிய மாடல் ரூ. 6.95 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரின் ஒட்டுமொத்த எடை சுமார் 2.5 டன் ஆகும். டிசைன் மற்றும் சொகுசு வசதிகளில் புதிய பரிணாமம் பெற்று இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது.
ம்… இந்த வாரம் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் முதலாளிகளுக்கு போறாத நேரம் போல…

89 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

14 − thirteen =