வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் உருவாகுமா? – பா.ரஞ்சித் விளக்கம்!

சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் உருவாகுமா? – பா.ரஞ்சித் விளக்கம்!

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா, விக்ரமின் சாமி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, சுந்தர் சி.யின் அரண்மனை ஆகிய படங்கள் 2 பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் 3 பாகங்கள் வெளியானது. இந்தியன் 2-ம் பாகம் தயாராகிறது
இந்த நிலையில் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் 2-ம் பாகத்தையும் எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பா.ரஞ்சித் இயக்கினார். குத்து சண்டையை மையமாக வைத்து தயாரான இந்தப் படத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.
படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறும்போது, “சார்பட்டா பரம்பரை படத்தில் வைக்க முடியாத சில விஷயங்களை முன்கதையாக வைத்து படம் எடுக்க யோசிக்கிறேன். 1925-ல் ஆரம்பிப்பதுபோல் கதை இருக்கும். இதை வெப் தொடராகவோ அல்லது திரைப்படமாகவோ எடுக்கும் எண்ணம் உள்ளது’’ என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன