கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அண்ணாசாலை, கோயம்போடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய இடங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக திகழ்கிறது. அதன் அருகே பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையமும் அமைந்துள்ளது.
கத்திப்பாரா பாலத்திற்கு கீழ் காலியாக இருந்த இடத்தில் 14.50 கோடி ரூபாய் செலவில் நகர்ப்புற சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சதுக்கத்தில் பேருந்து நிலையம், சிறுவர் பூங்கா, உணவகம், வணிக வளாகம் போன்றவை உள்ளன. இந்த சதுக்கத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.
535 Views

