சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: முதல்வர் மு.க.ஸ்டாலின்

”கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் கமல்ஹாசன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

”கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் கமல்ஹாசன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, தீராக் கலை தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான அன்புத்தோழர் கமல் ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்று பதிவிட்டுள்ளார்....
‘ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

‘ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் 5 வாரங்களுக்கு "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சாலைகளில் 3 மணி நேரத்திற்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் - நோக்கங்கள் தொடர்பான நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச சைக்கிள் பயணம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இந்த வாரம் அண்ணா நகரில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. 9 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மக்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "உடலை ஆரோக்கியமாக வைத்துக்க...
பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு!

பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரலம் 1-ம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியமும், அவர்களுக்குப் பிறகு அவர்களின் வாழ்விணையருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. மாறாக, அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இது பயனற்றது என்பதால் பழைய ஓய்வூதியத்துக்கு மாற அரசு ஊழியர்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத...
இன்று காலை தேனாம்பேட்டையில முதல்வர் திடீர் ஆய்வு !

இன்று காலை தேனாம்பேட்டையில முதல்வர் திடீர் ஆய்வு !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் நகரில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மழைநீர் வடிகால் வசதிகள் இருந்தும் தண்ணீர் வடியாததால் பல இடங்களில் 4 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மழைநீர் தேங்கிய பகுதிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் வேப்பேரி, பெரம்பூர், புளியந்தோப்பு, தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வேப்பேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், திரு.வி.க.நகர் பகுதிகளில் நடைபெற்ற பணிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து இன்று தேனாம்பேட்டை ப...
சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை விரைவில் தொடங்க திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை விரைவில் தொடங்க திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  AIBCF, SRA, PAGAAM, BAMCEF, We The People மற்றும் LEAD INDIA ஆகிய அமைப்புகள் இணைந்து “சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம்” என்ற தலைப்பிலான தேசிய இணையக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மகாராஷ்டிரா மாநில உணவு, நுகர்பொருள் வாணிபம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷகன் சந்திரகாந்த் புஜ்பால், ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆதிமுலப்பு சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி. வில்சன், டெரிக் ஓ பிரையன், மனோஜ் குமார் ஜா, ஈ.டி. முகம்மது பஷீர், அலாகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் வீரேந்திர சிங் யாதவ், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, PAGAAM நிறுவனர் சர்தார் தஜிந்தர் சிங் ஜல்லி, BAMCEF நிறுவனர் பி.டி. போர்க்கர், LEAD அமைப்பின...
கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அண்ணாசாலை, கோயம்போடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய இடங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக திகழ்கிறது. அதன் அருகே பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையமும் அமைந்துள்ளது. கத்திப்பாரா பாலத்திற்கு கீழ் காலியாக இருந்த இடத்தில் 14.50 கோடி ரூபாய் செலவில் நகர்ப்புற சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சதுக்கத்தில் பேருந்து நிலையம், சிறுவர் பூங்கா, உணவகம், வணிக வளாகம் போன்றவை உள்ளன. இந்த சதுக்கத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்....
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து! இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் வ...
13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக மேலும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், மக்களின் சிரமங்களை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் 13 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கோதுமை, ரவை, சர்க்கரை, உப்பு, புளி, மஞ்சள் தூள், கடுகு, பருப்பு, சீரகம், குளியல் சோப், சலவை சோப் உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 13 வகையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டது. நிவாரணப் பொருட்...