
10.5% இட ஒதுக்கீடு ஏமாற்றும் இராமதாஸ் – போராடும் சி.என்.ஆர் – முக நூலில் வெளுத்த நாகரத்தினம்
வன்னியர்களுக்கான, 10.5% சதவிகித, உள் இட ஒதுக்கீட்டு சட்டம், எப்படி, கருவானது/உருவானது❓
எப்படி “குறை” பிரசவ சட்டமானது❓
****************
1987 ல், MGR ஆட்சியில்,
25 வன்னிய உயிர்களை பலி கொடுத்து,
1989ல் பின்னர் வந்த, தி.மு.க ஆட்சியில், வன்னியர் உள்ளிட்ட 108 ஜாதிகளை உள்ளடக்கிய,
MBC என்ற பெயரில் 20% சதவிகித, “தொகுப்பு” இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.
இது, எல்லோருக்கும் தெரிந்த, செய்திதான்.
அந்த, அரசாணை ஆவணத்தில்,
108 ஜாதிகளுக்கான, மக்கள் தொகையும், ஜாதிவாரியாக, தனித்தனியாக, குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்படி குறிப்பிட்டிருந்தும், மதிப்பெண் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில், ஜாதிவாரி தேர்வு பட்டியல் தாயாரிக்கப்படாமல்,108 ஜாதிகளுக்கும்,
ஒரே மதிப்பெண் பட்டியல் (Random list) தயார் செய்து, இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதால், வன்னியர்களுக்கு கிடைக்கவேண்டிய, சரியான ஒதுக்கீடு, கல்வி மற்றும், வேலை வாய்ப்புகளில், கிடைக்காமல் போனது.
இது, காலங்கடந்து தான், நமக்கு, தெரியவந்தது.
இதற்க்கிடையில், தனி உள் இட ஒதுக்கீடு வேண்டி, BC பிரிவில் இருந்த, முஸ்லீம்களும்,
SC பிரிவில் இருந்த, அருந்ததியர்களும், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள்.

அவர்களின், கோரிக்கையின், அடிப்படையில்,
30% சதவிகித,
BC ஒதுக்கீட்டிலிருந்து, 3.5% சதவிகிதத்தை எடுத்து,
BC(M) என்ற பிரிவில் முஸ்லீம்களுக்கும், 18% சதவிகித,
SC ஒதுக்கீட்டிலிருந்து, 3% சதவிகிதத்தை எடுத்து,
SC(A) என்ற
பிரிவில் அருந்ததியர்களுக்கும்,
தனி உள் இட ஒதுக்கீடாக,
தமிழக அரசால், கொடுக்கப்பட்டது.
இந்த, சந்தர்ப்பத்தை பயன் படுத்தி,
20% சதவிகித,
MBC ஒதுக்கீட்டிலிருந்து, வன்னியர்களின், மக்கள் தொகையின் அடிப்படையில்,
15% சதவிகித,
தனி உள் இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில், C.N.இராமமூர்த்தி அவர்கள்,
2010 ஆண்டு வழக்கு தொடுத்தார்.
2010 முதல், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில், வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்து.
2012 ல், உயர்நீதிமன்றம், வழக்கின் பிரதிவாதியான, தமிழக அரசுக்கு, கடுமையான கண்டனத்தை தெரிவித்ததால், வன்னியர்களுக்கான, தனி உள் இட ஒதுக்கீடு சம்பந்தமாக, பரிசீலனை செய்வதாக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, உயர்நீதிமன்றத்தில், உத்தரவாதம் கொடுத்தது.
அதனடிப்படையில், அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில்,
தனி உள் இட ஒதுக்கீட்டுக்கான, GO(MS)No.35/2012 ஐ, அப்போதைய, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் திரு.G.சந்தானம் அவர்ளால் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவராக இருந்த, நீதிபதி ஜனார்த்தனன் அவர்கள், வன்னியர்களுக்கு, உள் இட ஒதுக்கீடாக,
13.5% சதவிகிதம் வரை வழங்கலாம் என, தமிழக அரசுக்கு,
பரிந்துரை செய்தார்.
மேற்க்கண்ட அரசாணையும், பரிந்துரையையும், அ.தி.மு.க அரசால் கிடப்பில் போடப்பட்டது.
இதனால், மீண்டும், C.N.இராமமூர்த்தி, உயர்நீதிமன்றத்துக்கு சென்று, முறையிட்டதின், அடிப்படையில்,
2015 ல், உயர்நீதிமன்றம், உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு,
கடைசி உத்தரவை பிறப்பித்தது.
2015 க்கு பிறகு, அப்போதைய முதல்வர், ஜெயலலிதா அவர்களின், முன்னெடுப்பில், ஆவண கோப்பு, பரிமாற்றங்கள் நடந்த நிலையில், அவருடைய இறப்புக்குப்பின், எடப்பாடியார் ஆட்சியில்,
உள் இட ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் அனைத்தும், மீண்டும் கிடப்பில், போடப்பட்டது.
அதுவரை, ராமதாஸூக்கும், வன்னியர்களுக்கான, உள் இட ஒதுக்கீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
2019, நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க வுடன், பா.ம.க கூட்டணி.
அந்த நேரத்தில் கூட,
சீட்டுக்கும், நோட்டுக்கும், ராஜ்யசபா MP சீட்டுக்கும், எடப்பாடியாருடன், ஒப்பந்தம் போட்ட ராமதாஸ்,
கிடப்பில் போடப்பட்ட,
உள் இட ஒதுக்கீட்டைப்பற்றி, பேசவே இல்லை.
பாராளுமன்ற தேர்தலும் முடிந்தது.
அ.தி.மு.க, பா.ம.க படு தோல்வியை சந்தித்தது.
இதற்க்கிடையில், C.N.இராமமூர்த்தி அவர்கள்,
உள் இட ஒதுக்கீட்டிற்க்கான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத, தமிழக அரசின் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தார்.
ராமதாஸின் அடுத்த இலக்கு, 2021 சட்டமன்ற தேர்தல்.
வன்னியர்களை சுலபமாக ஏமாற்ற, ராமதாஸின், துருப்பு சீட்டு,
“இட ஒதுக்கீடு”.
ஏற்க்கனவே, எடப்பாடியாரின், முதல்வர் அலுவலகத்தில், தனி உள் இட ஒதுக்கீட்டு ஆவண கோப்புகள், நிலுவையில் உள்ளதை,
தனக்கு சாதகமாக்கிக்கொள்ள, உள் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை கையிலெடுத்தார் ராமதாஸ்.
2021 தேர்தலில், அரசியல் செய்ய ஆரம்பித்தார் ராமதாஸ்.
பா.ம.க தொண்டர்களால், பெருங்களத்தூர் ரயில் மறியல், மற்றும் கல் எறி தாக்குதல் நிகழ்வை ஏற்ப்படுத்திய நிலையில், எடப்பாடியார் அன்புமணியை அழைக்கிறார், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு, ஆணையம் அமைக்கப்படுகிறது

ஒரு வழியாக,
உள் இட ஒதுக்கீட்டை,
2021 தேர்தல் வியாபார மூலதனமாக மாற்றினார் ராமதாஸ்.
2015 ம், ஆண்டிலிருந்து, கிடப்பில் போடப்பட்ட,
உள் இட ஒதுக்கீடு கோப்புகள், 2021 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு ,
4 மணி நேரத்துக்கு முன், சட்டமன்றத்தில், 10.5% சதவிகித,
உள் இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு, மசோதா கொண்டுவரப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டு, அன்றே, கவர்னரின் கையெழுத்துடன் சட்டமாக்கப்பட்டது. சட்டம் 08/26.02.2021.
உள் இட ஒதுக்கீட்டுக்காக, சட்டம் போட்ட, அ.தி.மு.க அரசு, 2021 சட்டமன்ற தேர்தலில், ஆட்சியை இழந்தது.
உள் இட ஒதுக்கீட்டு சட்டம், அமுல் படுத்தப்படாமலேயே, ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.
2021ல், ஆட்சியை கைப்பற்றிய, தி.மு.க அரசு, 08/26.02.2021 என்ற உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை, அரசாணை 75/2021 ஐ வெளியிட்டு, அதனடிப்படையில், அனைத்து கல்வி நிறுவனங்களிலிலும், வேலை வாய்ப்புகளிலும், உள் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது.
08/ 26.02.2021 என்ற உள் இட ஒதுக்கீட்டு சட்டம், தவறானது என்றும், செல்லத்தக்கவை அல்ல என்றும்,
MBC பிரிவில் உள்ள, சில ஜாதியினரால், உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை, விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, சட்டம் 08/26.02.2021 செல்லாது என்று, சில காரணங்களை முன்வைத்து, மேற்க்கண்ட சட்டத்தை ரத்து செய்தது.
அந்த சட்டத்தை போட, அப்போதைய நாளில் (26.02.2021), அப்போதைய அரசுக்கு, உரிமை இல்லை என்று, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை சொல்கிறது.
அரசியல் அமைப்பு திருத்த சட்டம், 102 / 11.08.2018 சொல்கிறது, இட ஒதுக்கீடு கொடுக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று.
உள் இட ஒதுக்கீடு கொடுக்க,
உரிமை இல்லாத காலத்தில், வன்னியர்களின் ஓட்டு வங்கியை கலவாட, எடப்பாடியாரும், ராமதாஸூம் சேர்ந்து, அதிகாரம் இல்லாத சட்டம் 08/26.02.2021 ஐ, போட்டு, தேர்தல் கூட்டணி வியாபாரத்தை, முடித்துக்கொண்டார்கள்.
தற்ப்போது, அரசியல் அமைப்பு திருத்த சட்டம், 105/ 29.08.2021 சொல்கிறது,
இட ஒதுக்கீடு கொடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று.
மாநில அரசுக்கு, அதிகாரம் இல்லாத நேரத்தில், தமிழக அரசால், போடப்பட்ட சட்டம் 08/26.02.2021 செல்லாது என்றும், அது ரத்து செய்யப்படுகிறது என்றும், உயர்நீதிமன்ற மதுரை கிளை,
தன் தீர்ப்பில் சொல்லியுள்ளது.
சட்டம் 08/26.02.2021 , வன்னியர்களுக்கு மட்டுமான,
சட்டம் அல்ல.
DNC மற்றும் MBC ஆகியவைகளை உள்ளடக்கியது.

சட்டம் 08/26.02.2021 ல், C.N.இராம மூர்த்தி, உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் உத்தரவுகளை, மேற்க்கோள் காட்டப்படாததால், மேற்க்கண்ட,
உள் இட ஒதுக்கீட்டு சட்டம், அடிப்படை தன்மை இல்லாமல் இயற்றப்பட்டுள்ளது என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை,
தன் தீர்ப்பில், தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சரியான, தேவையான, “தரவு”களை,
உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தில் குறிப்பிடாமல், எடப்பாடியாரும், ராமதாஸூம், தேர்தல் லாபத்துக்காக, குறை பிரசவ குழந்தையாக, சட்டம் 08/26.02.2021 ஐ போட்டு, வீணடித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற, மதுரை கிளை, மேற்கண்ட,
உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை,
ரத்து செய்யப்பட்ட நிலையில்,
தமிழக அரசால், உச்ச நீதிமன்ற, மேல் முறையீடு செய்யப்பட்டது.
மேல் முறையீட்டு மனுவில்,
உள் இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கான, சரியான, தேவையான, ஆவணங்களையும், “தரவு” களையும், குறிப்பிட்டுள்ளதாக, தமிழக அரசின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தெரிவித்தது.
மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்து, சில, இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து, 15.02.2022 க்கு வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
உத்தரவில், கூறியிருப்பது, 08/26.02.2021 சட்டத்தின் அடிப்படையில், ஏற்க்கனவே போடப்பட்ட, Admissions & Appointments ஆகியவைகளை மாற்றம் செய்யக்கூடாது என்றும், 15.02.2022 வரை, எந்த Admissions & Appointments எதையும், தமிழக அரசு, போடக்கூடாது என்றும், வழக்கை, 15.02.2022 க்கு ஒத்திவைப்பதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கான, 10.5 சதவிகித, உள் இட ஒதுக்கீட்டின் பிறப்பிடம், C.N.இராமமூர்த்தி என்ற வன்னியர், உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட, வழக்கின் உத்தரவுதான்.
எடப்பாடியாரும், ராமதாஸூம்,
10.5% சதவிகித,
உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை, குறைப்பிரசவ குழந்தையாக பிறக்கவைத்தவர்கள்.
வன்னியர்களுக்கான, இட ஒதுக்கீட்டை, 42 ஆண்டுகளாக, தன் அரசியல் வியாபாரத்துக்காக, கெடுத்தவர் ராமதாஸ் என்பது, ஆதாரபூர்வமான உண்மை.
ஒரு. வன்னியன்.????.
இப்படி தனது முக நூல் பக்கத்தில் நாகரத்தினம் எழுதி இருப்பது வன்னியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
