சனிக்கிழமை, ஜூலை 4
Shadow

விஜய் சேதுபதியின் 8 கெட்டப்பு… ஏகப்பட்ட வலி ‘ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்’..!

யதார்த்தமான நடிப்பால் சிக்ஸர் அடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியானது. இந்தப் படத்தில் எமன் என்ற பெயரில் நடித்து வரும் விஜய் சேதுபதி, படத்துக்காக நிறைய கெட்டப் போட்டிருக்கிறார்.

 

விஜய் சேதுபதி நிறைய மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் அவருக்கு நிறைய கெட்டப்புகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட எட்டு கெட்டப்புக்கு மேல் நடித்திருக்கிறார். மேக்கப் போட ஆரம்பித்துவிட்டால் அந்த கெட்டப்பின் ஷூட் முடிக்கிற வரைக்கும் மேக்கப்பை கொஞ்சம்கூட அவர் கலைக்க மாட்டார். கெட்டப்புக்கு ஏற்றவாறு முடி அலங்காரம் செய்யும்போது அவருக்கு ரொம்ப வலியாக இருக்கும். நீண்ட முடியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும்போது அது மிகவும் வலிக்கும். ஆனால், அதையெல்லாம் பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் விஜய் சேதுபதி அபாரமாக நடித்தார்.

https://youtu.be/2ZkfE_PstFY

எமனாக அவர் தோன்றிருக்கும் கெட்டப்பைத்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அறிமுகப்படுத்தினோம் என்கிறார்  இயக்குநர் ஆறுமுக குமார்.

577 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன