புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் “ஒயிட் ரோஸ்” புது பட அறிவிப்பை வெளியிட்ட எஸ். ஜே. சூர்யா!

 

பொங்கல் திருநாளில் ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் ‘ஒயிட் ரோஸ் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்ட எஸ். ஜே. சூர்யா!

தமிழ் சினிமாவில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு பரிமாணங்களில் நடித்துவரும் ஆர்.கே. சுரேஷ் தற்போது ‘ ஒயிட் ரோஸ்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் அறிவிப்பு பொங்கல் திருநாளான இன்று வெளியானது.

இதில் இன்னொரு நாயகனாக ரூசோ நடிக்கிறார்.
இதில் நாயகியாக கயல்’ ஆனந்தி நடிக்கிறார்.

இந்தப் படத்தை ஆர். கே. சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோ
வின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் ராஜசேகரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இவர் இயக்குநர் சுசிகணேசனிடம் சினிமா பயின்றவர்.

மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.

சைக்கோ திரில்லர் படமான இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது.

484 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன