புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

விட்டதை பிடிக்க ஓடிடிக்கு போனதா தனுஷின் “மாறன்”

 

 

 

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கி உள்ள படம் ”மாறன்”.  வைரஸ் பரவலின் 3ம் அலை, ஒமைக்ரான் மிரட்டல், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்குத்தான் அனுமதி என்ற சுழலில் இந்த  படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது.

அசுரன் மெகா ஹிட்டுக்குப் பின் தனுஷ், இயக்குனர் கார்த்திக் நரேனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த சூழலில் அருண்விஜயை வைத்து  கார்த்திக் நரேன் இயக்கிய மாபியா ரிலீஸ் ஆகாமல் இருந்தது.

அதன் காரணமாக மாபியா படத்தின் மீது தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஏனென்றால் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு திரைப்படம் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் அந்த அளவுக்கு இருந்தது. வலுவான திரைக்கதை மூலம், தமிழ் சினிமா உலகை கார்த்திக் நரேன் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

அவரது அடுத்த படமான மாபியா ரிலீஸ் ஆகி எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எந்தளவுக்கு முதல் படத்தில் கார்த்திக் பேசப்பட்டாரோ அதே அளவுக்கு மாபியாவில் விமர்சிக்கப்பட்டார்.

மாபியா படத்தின் சறுக்கலை தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்த நவரசா குறும்பட வரிசையில் , ப்ராஜெக்ட் அக்னி என்ற ஒரு குறும்படத்தை இயக்கியிருந்தார். இதுவும் பெருசாக எடுபடவில்லை.

இந்த சூழலில் அரவிந்த் சாமி, ஷ்ரேயா, சந்துப் கிஷன் உள்ளிட்டோரை வைத்து கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசூரன் திரைப்படம் முடங்கிப் போனது.

இப்படி அப்செட் சூழலில்தான் அசுரன் வெற்றிக்குப் பிறகு தனுஷ் “மாறன்” ஆக கை கொடுக்க வந்தார்.

தயாரிப்பு ந்றுவனமான சத்ய ஜோதியும் பெரும் நம்பிக்கையோடு மாறனை தொடங்கியது.

காரணம் அவர்களுக்கும் சமீபத்திய ஹிட் படம் எதுவும் அமையவில்லை.

ஏற்கனவே நாடு முழுதும் வைரஸ் பரவலின் வீரியம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கனக்கில் உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது,

தியேட்டர்களில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி. இரவு நேர ஊரடங்கால் இரவு காட்சிகள் ரத்து.

ஞாயிறு முழு ஊரடங்கு அமல் என பல சிக்கல்களால் பல படங்கள் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்திற்கு செல்கிறது.

அந்த வரிசையில் தனுஷ் நடித்த மாறன் படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதாம்.

தயாரிப்பு நிறுவனத்திற்கு சமீபத்திய கசப்பான அனுபவமாக அவர்களின் அன்பறிவு படத்தின் வாஷ் அவுட் விவகாரம்தான்.

அதன் காரணமாகவே மாறன் ஓடிடிக்கு வருகிறதாம். விட்டதை பிடிக்க வேண்டும் என்ற வெறியோடு வரும் சத்யஜோதி நிறுவனத்திற்கு மாறன் அள்ளி கொடுப்பாரா?

“தொலைச்ச இடத்துலயே தேடு”ன்னு கிராமத்தில் ஒரு பிரபலமான பழமொழி சொல்வாங்க… சத்யஜோதி கம்பெனிக்கும் இந்த பழமொழி தெரியும்போல….

 

 

– கோடங்கி

 

 

375 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன