police-attack
முக கவசம் அணியவில்லை என்பதால் தன்னை போலீசார் அடித்து துன்புறுத்தியதாகவும்,
முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் சட்ட கல்லூரி மாணவர் புகார் அளித்திருந்த நிலையில்,
இந்த புகாரில் உண்மையில்லை என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (22).
இவர் தரமணியில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் 5ம் ஆண்டு படித்து வருகிறது.
கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலையும் அவர் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து ரஹீம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் முகக் கவசம் அணியவில்லை என்பதால் போலீசார் ரஹீமை தடுத்து நிறுத்தியதாகவும்,
இதை தொடர்ந்து இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தன்னை நிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும்
முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்துல் ரஹீம் புகார் அளித்தார்.
இந்த சம்பவத்தில் போலீசாருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை விளக்கமளித்துள்ளது.
14.01.2022 அன்று P-6 கொடுங்கையூர் காவல் நிலைய எல்லையில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் முகக்கவசம் அணியாததால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக, மேற்கு மண்டல இணை ஆணையாளர் அவர்கள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி,
1/6 pic.twitter.com/ToOlS1vwiu— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) January 16, 2022
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், 14.01.2022 அன்று P-6 கொடுங்கையூர் காவல் நிலைய
எல்லையில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் முகக்கவசம் அணியாததால்
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது
இது தொடர்பாக, மேற்கு மண்டல இணை ஆணையாளர் அவர்கள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி,
கொடுங்கையூர் காவல் நிலைய சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு காவலர்களை
15.01.2022 அன்று நவீன காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு,
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
அதேபோல், மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளரின் முதற்கட்ட விசாரணையில்
சிறுநீர் கழித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று மேற்படி
மாணவனிடம் விசாரணை செய்தபோது, உறுதி செய்யப்பட்டது. எனினும், மேற்படி சம்பவம்
குறித்து தீர விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும், மேற்படி சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதில் சில பதிவுகள் தவறாக வழிநடத்தும் விதமாகவும், தவறான செய்திகளாகவும் உள்ளன.
எனவே, மக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், இது போன்ற
பொய்யான தகவல்களை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
