சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ்… அதிர்ச்சியில் ரஜினி!

 

 

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பல கோடி ரசிகர்களை உலகம் முழுதும் வைத்திருக்கிறார்.

இவருடயை மூத்த மகள் ஐஸ்வர்யா. பிரபல சினிமா தயாரிப்பாளரான அவருக்கு நடிகர்  தனுஷுக்கும் 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இது ஒரு காதல் திருமணம்.

இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தைகள் மீது ரஜினி எப்போதும் மிக பாசமாக இருப்பார்.

 

தமிழ்நாட்டில் உள்ள செலிபிரட்டி தம்பதிகளில் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் முக்கிய இடமுண்டு. சமீப காலமாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதை நடிகர் ரஜினியே பல முறை சமரசம் செய்து வைத்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், தனுஷும் ஐஸ்வர்யாவும் மனமொத்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.

 

இதுகுறித்த தனுஷுன் ட்விட்டர் பதிவில், ‘18 வருடங்களாக நண்பர்களாக, இணையர்களாக, பெற்றோர்களாக, ஒருவொருக்கொருவர் நலம் விரும்பிகளாக நாங்கள் இணைந்திருந்தோம்.

இந்தப் பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரித்தல், ஏற்றுக்கொள்ளுதல் என்பதாக இருந்தது. இன்று நாங்கள் எங்களுடைய பாதையில் பிரிந்து செல்லவேண்டிய இடத்தில் நிற்கிறோம்.

ஐஸ்வர்யாவும், நானும் ஒரு தம்பதியாக பிரிந்து செல்ல முடிவுஎடுத்துள்ளோம். தனிப்பட்ட முறையில் எங்களை கூடுதலாக புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொண்டுள்ளோம். எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள். இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு எங்களுக்கு தனிமையைக் கொடுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல ஐஸ்வர்யாவும், நானும் ஒரு தம்பதியாக பிரிந்து செல்ல முடிவுஎடுத்துள்ளோம். தனிப்பட்ட முறையில் எங்களை கூடுதலாக புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொண்டுள்ளோம். எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள். இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு எங்களுக்கு தனிமையைக் கொடுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரிவு அறிவிப்பை இரவில் அறிவித்திருக்கிறார்கள். இவர்கள் பிரிவுக்கான உண்மையான காரணம் என்ன ஏன்பதை பிரிந்து போகும் எந்த பிரபலங்களும் சொல்வதில்லை.

மாப்பிள்ளை தனுஷ், மகள் ஐஸ்வர்யா எடுத்த இந்த பிரிவு முடிவு ரஜினிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சமீபத்தில் தான் தெலுங்கு காதல் ஜோடி நாகசைதன்யா, சமந்தா பிரிந்தார்கள்.

 

286 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன