இந்தியாவில் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக இருந்தது. நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பின் தாக்கம் தீவிரமாக இருந்தது.
நாள் ஒன்றுக்கு 35,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது, கடந்த ஒரு வார காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.
இந்தமுறை அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் திரிஷா, சத்யராஜ், மீனா, பிரபல தெலுகு நடிகர் மகேஷ் பாபு, மலையாள பட இயக்குநர் பிரயதர்ஷன் உள்ளிட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
...
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் இருவரும் பிரிவதாக முடிவெடுத்த பிறகு பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களை சமாதானம் செய்து வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
கஸ்தூரி ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தனுஷ் தங்கள் மகன்தான் என்று சில வருடங்களுக்கு முன்பு புகார் கொடுத்த மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தம்பதியினர் கதிரேசன் மற்றும் மீனாட்சி ஆகியோர்,
தனுஷ்-ஐஸ்வர்யா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று ரஜினிக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வாழ்ந்து வரும் அவர்கள் தனுஷ் காணாமல்போன தங்கள் மகன் கலையரசன்தான் என்று தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த கோரிக்கையின் மூலம் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை மீண்டும் சூடு பிடித்துள்ளது....
தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பல கோடி ரசிகர்களை உலகம் முழுதும் வைத்திருக்கிறார்.
இவருடயை மூத்த மகள் ஐஸ்வர்யா. பிரபல சினிமா தயாரிப்பாளரான அவருக்கு நடிகர் தனுஷுக்கும் 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இது ஒரு காதல் திருமணம்.
இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தைகள் மீது ரஜினி எப்போதும் மிக பாசமாக இருப்பார்.
தமிழ்நாட்டில் உள்ள செலிபிரட்டி தம்பதிகளில் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் முக்கிய இடமுண்டு. சமீப காலமாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதை நடிகர் ரஜினியே பல முறை சமரசம் செய்து வைத்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், தனுஷும் ஐஸ்வர்யாவும் மனமொத்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்த தனுஷுன் ட்விட்டர் பதிவில், ‘18 வருடங்களா...