புதன்கிழமை, ஜூலை 29
Shadow

ரஜினி மகளை தொடர்ந்து கணவரை பிரியும் சிரஞ்சீவியின் மகள்?

 

 

சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, தனது இன்ஸ்டாகிராம் ஹேண்டிலில்

கணவரின் பெயரை நீக்கியது விவாகரத்து வதந்திகளைத் தூண்டியுள்ளது.

இதனால் ஸ்ரீஜா தனது கணவர் கல்யாண் தேவிடமிருந்து பிரிந்துவிட்டதாக ஊகங்கள் பரவி வருகின்றன.

இந்த ஜோடி மார்ச் 2016-ல் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

விவாகரத்து வதந்திகள் குறித்து சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீஜா இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில்,

ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியை மாற்றிய பின்னர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அவரது முந்தைய இன்ஸ்டாகிராம் ஹேண்டில், “ஸ்ரீஜா கல்யாண்” என்று இருந்தது.

திடீரென அவர் தனது இயற்பெயரான ஸ்ரீஜா கொனிடேலா என்று மாற்றியுள்ளார்.

அதோடு இன்ஸ்டாகிராமில் கல்யாணை அவர் அன்ஃபாலோ செய்ததையும் ரசிகர் ஒருவர் கவனித்திருக்கிறார்

 

மார்ச் 2016-ல், பெங்களூரு, தேவனஹள்ளிக்கு அருகில் உள்ள குடும்பத்தின் பண்ணை வீட்டில்

ஸ்ரீஜா, கல்யாணை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த திருமண விழாவில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும்

தென்னிந்திய சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

விழாவின் படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன.

ஸ்ரீஜாவின் சகோதரரும் தெலுங்கு நடிகருமான ராம் சரண், அவரது மனைவி உபாசனா,

அல்லு அர்ஜுன் மற்றும் அல்லு சிரிஷ் ஆகியோர் திருமணத்தில் கலந்துக் கொண்டனர்

 

நவம்பர் 2018-ல், தானும் ஸ்ரீஜாவும் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக முகநூலில் அறிவித்தார் கல்யாண்.

கல்யாணை திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஸ்ரீஜா,

தனது கல்லூரி காதலன் சிரிஷ் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அப்போது அவருக்கு வயது 19. இருப்பினும், அவரது மாமியார்

வரதட்சணை கேட்பதாக சட்டப்பூர்வமாக அவரிடமிருந்து பிரிந்தார்.

அதோடு சிரிஷுக்கு எதிராக ஒரு துன்புறுத்தல் வழக்கையும் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதேபோலதான் சில மாதங்களுக்கு முன் சம்ந்தாவும் தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து

நாக சைதன்யா குடும்ப பெயரை நீக்கியபின் தான் விவாகரத்து விவகாரம் வெளியில் வந்தது.

573 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன