திங்கட்கிழமை, மே 4
Shadow

இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரர்..!

 

 

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மூலம் இந்திய அணிக்கான சர்வதேச பயணத்தை தொடங்கியுள்ளார் வெங்கடேஷ்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இதில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் வெங்கடேஷ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் களம் கண்டுள்ளார். கடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய அவர், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கியதால், அவருக்கான இந்த வாய்ப்பு தேடி வந்துள்ளது.

 

இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியிருக்கும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அஸ்வின், சாஹல் என இரண்டு ஸ்பின்னர் மற்றும் ஷர்துல் தாக்கூர், வெங்கடேஷ் என இரண்டு ஆல்ரவுண்டர்களுடன் இந்திய அணி இப்போட்டியில் களம் கண்டுள்ளது.

இதனால், மிடில் ஆர்டரில் அண்மையில் வாய்ப்பு பெற்று நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சூர்யகுமார் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. வெங்கடேஷ்  சிறப்பாக விளையாடும்பட்சத்தில் அவருக்கான இடம் எதிர்காலத்தில் தொடர்ந்து கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்வாரா? என அனைவரும் இன்றைய போட்டியை உற்று நோக்கி வருகின்றனர்.

394 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன