சனிக்கிழமை, ஆகஸ்ட் 22
Shadow

அரசியல் ஆசை ? வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இந்த வருடம் ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘சத்யா’ திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படமும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. இதில் சத்யா படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பில் வரலட்சுமி பேசும்போது, ‘சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர், தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.
சேவ் சக்தி அமைப்பு விஷயமாகதான் நான் முதல்வரை சந்தித்தேன். நான் அரசியலில் இணைய போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன்.
என்னுடைய தந்தையின் பார்டியில் கூட நான் இணையவில்லை. நான் இப்போதைக்கு சத்யா சக்சஸ் பார்டியில் தான் உள்ளேன். இந்த வருடத்தில் விக்ரம் வேதா, சத்யா என எனக்கு இரண்டு வெற்றி படங்கள் உள்ளது மகிழ்ச்சி’ என்றார்.
613 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன