
அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி வெளியான படம் ‘மவுனம் பேசியதே’. சூர்யா நாயகனாக நடித்த இந்த படத்தில், திரிஷா நாயகியாக அறிமுகம் ஆனார்.

அடுத்து விக்ரமுடன் ‘சாமி’, விஜய்யுடன் ‘கில்லி’ என்று பல முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து அங்கும் முதல் இடம் பிடித்தார்.

இவ்வாறாக திரிஷா, திரை உலக பயணத்தில் தனது 15-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் தற்போது ‘96’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
501 Views
