புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ஜெய்பீம் சூர்யா, உதயநிதி ஸ்டாலினுக்கு ஆஸ்கார் விருது!

 

 

உலகளாவிய சமூக ஆஸ்கார் விருது மனித சமூகங்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த சர்வதேச மற்றும் சமூக ஹீரோக்களை அங்கீகரிக்கிறது.

இந்நிலையில், 11வது பாராளுமன்ற உலக சமூக ஆஸ்கர் விருதுக்கான 4 பிரிவுகளின் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டேனி கே டேவிஸ் வெளியிட்டுள்ளார்.

இதில் ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு 2021-ம் ஆண்டுக்கான உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மைக் கதையை மையமாக வைத்து சமூகநீதி என்ற கருப்பொருளில் வெளியிடப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குனர் டி.ஜே.ஞானவேல்ராஜா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Global Community Oscar award அதேபோல் உலகெங்கிலும் வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவர்களை கௌரவிக்கும் வகையில் சமுதாய ஆஸ்கர் விருது கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021 என்ற பிரிவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது

ஜெய்பீம் படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் இது போன்ற விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்படுவது உண்மைச் சம்பவத்தை தைரியமாக எடுக்க நினைக்கும் இயக்குனர்களை ஊக்குவிக்கப்படுகிறது. அதேபோல் உதயநிதிக்கு விருது அளிப்பது அவரது திரை ரசிகர்கள் மற்றும் அரசியல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

715 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன