திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவரானார் பூச்சி முருகன் – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

 

தமிழக வீட்டுவசதி வாரிய தலைவராக பூச்சி முருகன், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தலைவராக துறைமுகம் காஜா ஆகியோரை நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நடிகரும் திமுக கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான அண்ணன் பூச்சி முருகன் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடை பெற்றது.

 

 

மண மக்களுடன் பூச்சி முருகன் அவர்கள் வரவேற்பு விழா மேடையில் இருக்கும் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பூச்சி முருகன் அவர்களை தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக நியமித்து அரசாணை வெளியானது.

 

மணமக்களை வாழ்த்த வந்தவர்கள் முதல்வர் கொடுத்த பரிசாக மகிழ்ச்சியடைந்து  வாரியத்தலைவர் பூச்சி முருகனுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

நமது kodanki.in , இணையதளம், kodanki voice யூடியூப் சார்பாக மூத்த செய்தியாளர் கோடங்கி ஆபிரகாமும்,

நாற்காலி செய்தி ஆசிரியர் கார்த்திகேயனும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அதே மேடையில் வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

813 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன