புதன்கிழமை, ஜூலை 29
Shadow

ஓராண்டில் கசந்த காதல்… 5வது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை!

 

 

பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். 54 வயதான இவர் பே வாட்ச், தி இன்ஸ்டியூட், எஸ்பிஎஃப், தி பீப்பிள் கார்டன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2010ஆம் ஆண்டு இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் பமீலா ஆண்டர்சன்.

இவர் 1995ஆம் ஆண்டு இசைக்கலைஞர் டோமி லீ என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

ஆனால் மூன்று ஆண்டுகளிலேயே அந்த திருமணம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து 2006 ஆம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்தார் ஆண்டார். ஆனால் அதே ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

 

தொடர்ந்து 2007ஆம் ஆண்டு ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை திருமணம் செய்தார். அந்த திருமணமும் அடுத்த ஆண்டே முறிந்தது.

ஆனால் 2014 ஆம் ஆண்டு மீண்டும் ரிக் சாலமனை திருமணம் செய்து கொண்ட பமீலா ஒரு வருடத்துக்கு பிறகு ரிக்கை மீண்டும் விவகாரத்து செய்தார்.

நான்காவது முறையாக கடந்த 2020ஆம் ஆண்டு ஹாலிவுட் தயாரிப்பாளரும் ஹேர் ஸ்டைலிஸ்ட்டுமான ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்து 12 நாட்களில் விவாகரத்து பெற்று ஒட்டு மொத்த ஹாலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார்.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி தனது பாதுகாவலர் டேன் ஹேய்ஹர்ஸ்ட்டை காதலித்து ஐந்தாவது திருமணம் செய்தார் பமீலா ஆண்டர்சன்.

இந்நிலையில் தனது ஐந்தாவது கணவரையும் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார் பமீலா ஆண்டர்சன்.

 

683 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன