ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

டாக்டர் ராமதாஸ் புதிய உருட்டாக “வட தமிழக தலைவர்கள் புறக்கணிப்பு” கோஷம்!

 

டாக்டர் ராமதாஸ் புதிய உருட்டாக “வட தமிழக தலைவர்கள் புறக்கணிப்பு” என்ற கோஷத்தை கையில் எடுத்திருக்கிறார்.

சென்னையில் இன்று நடைபெற்ற் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்கு போராடிய வட தமிழக தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் ராமதாஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73வது குடியரசுத் தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் தமிழக அரசின் சார்பில் குடியரசுத் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி, பங்கேற்று தேசிய கொடியை பறக்கவிட்டார்.

இதை தொடர்ந்து தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன.

இந்நிலையில், இந்த அணிவகுப்பில் வடதமிழக விடுதலை போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக ஒரு டிவிட் பதிவை போட்டிருக்கிறார் ராமதாஸ்.

அதில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம் பெற்ற

அலங்கார ஊர்த்திகளில் ஏன் வட தமிழக தலைவர்கள் உருவங்கள் இடம்பெற வில்லை என கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

டாக்டர் ராமதாஸ் சமீப காலமாக எதை செய்தாலும் அது வைரலாகி கேலியும் கிண்டலுமாக மாறிவிடுகிறது.

திமுகவுடன் மீண்டும் நெருங்க பல  வழிகளில் முயற்சுத்தும் முடியாமல் போனதால்,

தமிழகத்தில் தங்கள் இருப்பை தக்க வைக்க ஜெய்பீம் பட சச்சை என்ற உருட்டை கையில் எடுத்து அசிங்கப்பட்டார்கள்.

இப்போது மீண்டும் அடுத்த உருட்டாக ”சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய,

உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என கூறி

“வட தமிழக தலைவர்கள் புறக்கணிப்பு” என்ற புதிய உருட்டை கையில் எடுத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

டாக்டர் ராமதாசின் அந்த டிவிட் உருட்டு பதிவுக்கு கீழே நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

 

 

352 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன