
சீனாவின் புத்தாண்டு இன்று. அந்நாட்டில் சந்திர புத்தாண்டு, மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.
வழக்கமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் செல்வார்கள்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனாவால் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பல மாறுதல்கள் காணப்படுகின்றன.
சீனா, ஹாங்காங், மக்காவு, தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மொரிசியஸ், மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட சீன மக்கள் கணிசமாக உள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

தொற்றுநோயால், புத்தாண்டுக்கு வீடு திரும்ப இயலாமல் மக்கள் மன வருத்தப்படுகின்றனர்.
சாதாரண காலங்களில், லட்சக்கணக்கான மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் என சீனாவில் பலரும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலம் தங்கள் வீடுகளுக்கு பயணிப்பார்கள்.
சீன மொழியில் “வசந்த விழா” என்று அழைக்கப்படும் இந்த விடுமுறையானது சீனாவின் மிக முக்கியமான தேசியத் திருவிழா

