திங்கட்கிழமை, மே 13
Shadow

இன்றைய முக்கியச் செய்திகள் – Today Head Lines – 03.02.22

 

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு இந்தியா முழுவதுமுள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேல்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், அமமுகவுக்கு குக்கர் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக ஆயிரத்து 429 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் பகுதியில் இன்று இரண்டு ஆடுகளை கொன்று சிறுத்தை அட்டகாசம் செய்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நம்பியூர் காந்தி நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், எட்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, சென்னை மாநகராட்சியில் மட்டும் 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தோதலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

திருச்சி மாநகராட்சி தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி இறுதியானது. 2, 24, 31, 39, 41 வார்டுகள் என, 5 இடங்கள் ஒதுக்கீடு.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் 48 பேர் போட்டியிட உள்ளனர்.

 

 

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ஆறரை கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சீர்காழி அருகே திருநாங்கூரில் 128 ஆம் ஆண்டு 11 தங்க கருடசேவை உத்ஸவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்கும் கீழ் பதிவானது. புதன்கிழமை தினசரி தொற்று எண்ணிக்கை 14,013 ஆக பதிவாகியுள்ளது.

15 முதல் 18 வயதினருக்கான 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை விரைந்து செலுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்த திட்டத்தை 2 வாரங்களில் வகுத்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் சிபிஐ-க்கு உதவ, தமிழக காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை வழங்குமாறு மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி உதகை நீதிமன்றத்தில் வாளையாறு மனோஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி 9வது வார்டில், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் ஜோதி மகேஸ்வரி என்பவர், தேர்தல் வைப்பு தொகை 4 ஆயிரம் ரூபாயை 20 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களாக செலுத்தினார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் பெண் வேட்பாளர் கணவருடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

சிலை கடத்தல் வழக்கில் பாஜக நிர்வாகி, இரண்டு காவலர்கள் உள்ளிட்ட நான்கு பேரை மதுரை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தமிழ் நாட்டில் பாஜகவால் ஆட்சி அமைக்கவே முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி கிட்டப் பார்வை கொண்டவர் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கீதத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் ஆஜராகுமாறு மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

 

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சிம்புவின் பிறந்தநாள்.

கிரிக்கெட் வீரர் தோனி, நாயகனாக இடம்பிடித்துள்ள Atharva -the origin என்ற கிராபிக் நாவலின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

330 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன