சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் – திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஆவேசம்

 

 

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் மக்களவையில் திமுக எம்.பிகள் முழக்கமிட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை இந்த மாசோதா பாதிக்கும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

பிப்ரவரி 1-ம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாகவும் நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.

நீட் மாசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அவருக்கு எதிராக தமிழக எம்.பிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

மசோதாவை 2-வது திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லை . 5 மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துவிட்டு தற்போது திருப்பி அனுப்பியது எந்த வகையில் நியாயம் என்று மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

தமிழக கவர்னரை திரும்ப பெற கோரி தமிழ்நாடு எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கமிட்டனர்.  தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
நீட் விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூ. உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
334 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன