வியாழக்கிழமை, ஜூன் 6
Shadow

இன்றைய முக்கியச் செய்திகள் Today Head Lines 4.2.22

 

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி ஊர்வலம், பேரணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 11-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, சென்னை மாநகராட்சி மன்றக் கூடம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலான பின்பு கடந்த 7 நாட்களில் சென்னையில் மட்டும் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் 699 மூத்த அதிகாரிகள் வட்டார பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 27,365 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

 

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக ஆளுநரை பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை இன்று காலை சந்திக்க உள்ளார்.

சென்னை புத்தக காட்சியை பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதிக்குள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ் நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வேண்டும் என டி.ஆர். பாலு வலியுறுத்தினார் .

அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டு மக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நேற்று 11,993 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று தொடர்ந்து குறைந்துவருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் ஏரியில் சுமார் 5 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

விழுப்புரத்தில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பிரியாணி சமைத்து விற்பனை செய்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 750 சவரன் நகை திருடப்பட்ட வழக்கில், உறவினர்கள் இருவரே திருடியது அம்பலமாகியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே இரண்டு யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி காவல்நிலையம் அருகே நகை அடகுக் கடைக்காரரிடம் இருந்து 130 கிராம் தங்கம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பிரச்னை சரி செய்யாததால் குறிப்பிட்ட ஒரு வார்டு மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

நம்பியூர் பகுதிகளில் 5 ஆடுகளை கொன்ற சிறுத்தையை 3ம் நாளாக ட்ரோன் மூலம் தேடும் பணி தொடர்கிறது.

 

நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கான வேட்பாளர்களின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு 16 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளில், 197 இடங்களில் அதிமுக களம் காண்கிறது. மீதமுள்ள 3 வார்டுகளில், இரண்டு இடங்கள் தமிழ் மாநில காங்கிரஸூக்கும், ஒரு இடம் சமத்துவ மக்கள் படை கட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தனது முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களில் நான்காயிரத்து 717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்த, நிரந்தரமாக இடம் ஒதுக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட பார்சல் ஒன்றில், வெடிகுண்டு போன்ற பொருள் இருந்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பதற்றமான சூழல் நிலவியது.

 

இந்திய கிரிக்கெட் அணியில் 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று கோலாகலமாகத் தொடங்க உள்ளன.

சீனாவில் இன்று தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது

188 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன