
டார்க் காமெடி படங்கள் எப்போதாவதுதான் தமிழ் சினிமாவில் பேசப்படும். அப்படி பேசு பொருளாக மாறிய படம்தான் பன்றிக்கு நன்றி சொல்லி.
தலைப்பைப் போலவே படம் முழுக்க சிரிப்புக்கு பஞ்சம் இல்லை.
சரி என்னதான் கதை…
பல நூறாண்டுகளுக்கு முன் சீனாவில் ஒரு அரசன் பஞ்சலோகத்தால் ஆன சின்ன பன்றி சிலையை வைத்திருக்கிறார்.
இந்த சிலையை வைத்திருபவர்கள் செல்வ செழிப்பில் இருப்பார்கள் என்பதால் பலர் அந்த பன்றி சிலையை திருட முயற்சிக்கிறார்கள்.
எப்படியோ அந்த சோழ தேசம் வருகிறது. அங்கே சிலை மண்ணுக்குள் புதைக்கப்படுகிறது.
இது நடந்து பல நூறாண்டுகளுக்கு பின் அதாவது நிகழ்கால வருடத்தில் தொல்துறை ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் சிக்குகிறது அந்த பன்றியின் சிலை.
இதை தெரிந்து கொண்ட ஒரு ரவுடி ஆராய்ச்சியாளரைக் கொன்று, சிலையை கைப்பற்றிச் செல்கிறான்.
அந்த ரவுடியுடன் இருந்த 2 பேர் அந்த சிலையை எங்கோ மறைத்து வைக்கிறார்கள். மறைத்து வைத்த இடஹ்தை கண்டுபிடிக்க சில ரகசிய குறியீடுகளை வைக்கிறார்கள்.
அந்த சிலை பல போடி மதிப்புடையது என்பதால் அதை அடைய பல குழுக்கள் முயற்சிக்கிறது.
இதற்கிடையில் அந்த சிலையை மறைத்து வைத்த 2 பேரும் இறந்து போகிறார்கள்…
யார் கையில் அந்த சிலை கிடைத்தது? என்ன நடந்தது என்பதுதான் கதை…

வழக்கமான சினிமா போல ஹீரோ, ஹீரோயின் வில்லன் என்றெல்லம் இல்லை. அத்ற்கு பதில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம், நிஷாந்த் என மூவரும் நடித்திருக்கிறார்கள்.
வளர்ந்து வரும் வில்லனாக பார்த்து பழக்கப்பட்ட விஜய் சத்யாவிற்கு பன்றிக்கு நன்றி சொல்லி வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். ஒரு சில காட்சிகளில் வரும் விஜய் சத்தியாவின் காமெடிகள் வயிறு குலுங்க வைக்கும். இனி முரட்டு வில்லனாக மட்டுமல்ல காமெடி காட்சிகளுக்கும் விஜய்சத்தியாவை இயக்குனர்கள் அழைக்க வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளது இந்த படம்.
அறிமுக இயக்குனர் பாலா அரண் கைதேர்ந்த இயக்குனர் போல கதையையும் திரைக்கதையையும் வசனங்களையும் மிக யதார்த்தமாக கொடுத்திருக்கிறார்.
பாலாஜி ரத்தினம் மற்றும் நிஷாந்த் இருவரும் அனுபவ நடிகர்கள் போன்று மிகவும் யதார்த்தமாகவும் கதாபாத்திரத்திற்குள் பொருந்துகிறார்கள்.
படம் தொடங்கி முடியும்வரை சிரிப்புக்கு பஞ்சம் இல்லை. ஆக்ஷன் கலந்த காமெடி கிளைமாக்ஸ் காட்சி வயிறு குலுங்க வைக்கும்.
கண்களை உறுத்தாத ஒளிப்பதிவு, தேவையான காட்சிகள் அளவான வசங்களை மட்டும் வைத்த எடிட்டரின் நேர்த்தி. பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்.
மொத்தத்தில் “பன்றிக்கு நன்றி சொல்லி” சிரிப்புக்கு கியாரண்டி..
– கோடங்கி
*மதிப்பீடு 3.75/5*
