
மாநாடு படம் தியேட்டரில் ரிலீசான முதல் நாளே ரூ.10 கோடி வசூலை பெற்றதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிச்சார்.
தொடர்ந்து சில நாட்கள் மாநாடு படத்தின் தினசரி வசூலை ட்விட்டரில் பகிர்ந்து வந்தார்.
இதே மாநாடு படத்தின் 25வது நாளில் இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைஞ்சதா அறிவிக்கப்பட்டது.

அதற்கு பிறகு மாநாடு படம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் தியேட்டர்களில் மாநாடு படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மாநாடு படம் ரிலீசாகி இன்றுடன் 75 நாட்கள் ஆகிறது. இது பற்றி சுரேஷ் காமாட்சி வேதனையுடன் நேத்து நைட் சோசியல் மீடியாவில் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நாளை 75வது நாள் மாநாடு. ரோகிணியில் கோலாகலம் காண்கிறது. 75 நாட்கள் ஆகியும் இன்னமும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றிப்படத்திற்கே இந்த நிலைன்னா…மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல? இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்ய ?
நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போறதுல என்ன தப்பு இருக்குன்னு யோசிக்க வைக்குறாங்க” அப்படீன்னு கேட்டிருக்கார்.
#maanaadu75days pic.twitter.com/m6A1Z4XMLF
— sureshkamatchi (@sureshkamatchi) February 5, 2022
ஏற்கனவே தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு மக்கள் அதிகம் வருவதில்லை அப்படீன்னு ஒரு வருத்தமும் இருக்குது. சமீபத்திய தியேட்டர் ரிலீஸ் படங்களில் புஷ்பா படத்துக்கு பின் எந்த படௌம் கலெக்ஷன் ஆகாம பிளாப் ஆனதை தயாரிப்பாளர்கள் யாரும் மறந்திருக்க மாட்டாங்க.

