
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு வியப்பு தான். அவரைப் பற்றி தெரிந்து கொள்ள இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.
பிப்ரவரி 6 ஆம் தேதி, இங்கிலாந்து ராணி அரியணையில் அமர்ந்து, ஆட்சி செய்யத் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இவருடைய ஆட்சி, நாட்டை பல்வேறு முறையில் முன்னேற உதவியதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறை தத்தளித்த போதும் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும் செயல்பட்டு வருகிறது.
நினைவுகள் எவ்வளவு அழகானவை என்பது அரசிக்கும் பொருந்தும். இரண்டாம் எலிசபெத் ராணி, தனது 70 ஆண்டு கால ஆட்சியை முன்னிட்டு,
ஆட்சியை நினைவு கூறும் முக்கிய நினைவுச் சின்னங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாய் குறுக்கிட்டது.
நினைவுச்சின்னங்களில் கலைப்பொருட்கள், குழந்தைகள் அனுப்பிய அட்டைகள் மற்றும் பொதுமக்கள் அரசியை வாழ்த்திய செய்திகள் ஆகியவை இருந்தன. இவை அனைத்தும் அரசி தன்னுடைய விண்ட்சார் மாளிகையில் உள்ள அறையில் நடந்தது.

அரசியை தொந்தரவு செய்த நாய் அவர் வளர்க்கும் நாய்களில் ஒன்றாகும். அதன் பெயர் கேண்டி. கேண்டி, டாஸ்ஷன்ட் மற்றும் கோர்கி ஆகிய இரண்டின் கலவையாக அறியப்படும் டார்கி என்ற இனத்தைச் சேர்ந்தது. அறையில் நுழைந்த கேண்டி, அமைதியாக அறையில் இருக்கும் பத்திரிக்கையாளர்களை நோட்டமிட்டது
தன்னுடைய செல்ல நாயைக் கண்ட உடனேயே உற்சாகமான ராணி, ‘நீ எங்க இருந்து வந்திருக்க, உனக்கு என்ன வேண்டும்னு எனக்குத் தெரியும்’ என்று கொஞ்சியபடி வரவேற்றார்.
இந்த நிகழ்வு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்தது. இங்கிலாந்து ராணிக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிரியம் என்பது பலருக்கும் தெரிந்தது தான்.

