வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்

 

டைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்   3.5/5

விவசாயிகள் படும் வேதனை பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் எத்தனை படங்கள் வந்தாலும் அதில் எப்போதும் இந்த கடைசி விவசாயி தனியாக தெரியும் அளவுக்கு ஒரு அழுத்தமான வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

“அழகென்ற சொல்லுக்கு முருகா” என்ற பழைய பாடலுடன் டைட்டில் தொடங்கும் போதே நம்மையும் அறியாமல் படத்திற்குள் நாம் பயணப்படுகிறோம்.

அப்படி டைட்டிலில் தொடங்கி கடைசி எண்ட் கார்டு போடுவதுவரை காட்சிகளில் இருந்து நம்மை அகலவிடாமல் பார்த்துக் கொண்டது மாயாண்டியாக வாழ்ந்த நல்லாண்டி நடிப்பும் ஒளிப்பதிவும் அளவான வசனங்களும்தான்.

கதைப்படி கிராமத்தில் விவசாயியாக இருப்பவர் மாயாண்டி வயதான காலத்திலும் தனது வயலில் விவசாயம் பார்க்கிறார்.
அந்த ஊரில் விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி கார்ப்பரேட்டுக்கு விற்கும் ஒரு சிலர் மாயாண்டி நிலத்தை விலைக்கு கேட்கிறார்கள். அவர் தர மறுக்கிறார்.

இதற்கிடையில் தனது வயலில் செத்துகிடந்த மயிலை மாயாண்டி புதைக்கிறார்.
இந்த சூழலில் நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஊர்த்திருவிழாவை நடத்த முடிவு செய்கிறார்கள்.
திருவிழாவில் படைப்பதற்காக நெல் கேட்பதால் தனது வயலில் பயிரிடுகிறார் மாயாண்டி.

இந்த சூழலில் மயிலை கொன்று புதைத்த வழக்கில் மாயாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

அவர் சிறையில் இருந்து வந்தாரா? மயிலை கொன்றது யார்? திருவிழா நடந்ததா? பயிர் அறுவடை ஆனதா?

இத்தனைக்கும் விடை சொல்கிறது கடைசி விவசாயி.

படத்தின் உயிரோட்டமே மாயாண்டி ஆக வாழ்ந்த நல்லாண்டியின் யதார்த்தமான நடிப்பு.

தான் கைது செய்யப்பட்ட விவரம் கூட தெரியாமல் பயிர்கள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் செத்துவிடும்.

தண்ணீர் பாய்ச்சனும் வயலுக்கு போகலாம் வா என அழைப்பதில் தொடங்கி, ஒவ்வொரு பயிரும் ஒரு உயிர்தானே என உருகும் காட்சியிலும்,

செத்துகிடந்த மயிலை புதைத்த விவகாரத்தில் ஆமா ஆணொன்னு பெண் மயிலு 2 செத்து கிடந்துச்சி நான் தான் பொதச்சேன்னு” சொல்லும் வெள்ளந்தி தைரியத்திலும் மாயாண்டி நம் மனசை விட்டு அகல மறுக்கிறார்.

பழைய பகை இருந்தால் போலீஸ் யார் மீது வேண்டுமானாலும் பொய் கேஸ் போடுவார்கள் என்பதையும் சொல்லி இருக்கும் இயக்குனர் மணிகண்டன் காட்சிகளாகவும், வசனங்களாகவும் வைத்திருப்பது பலம்.

கடைசி விவசாயிக்கு இதுதான் நிலை என்பதை சொல்லாமல் சொல்கிறார் இயக்குனர்.

இறந்துபோன முறைப்பெண்ணை நினைத்தபடி முருக பக்தனாக வலம் வரும் விஜய்சேதுபதி கதாபாத்திரம் இந்த படத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

விளம்பரத்துக்காக் அல்லது வியாபாரத்துக்காக விஜய்சேதுபதியை நடிக்க வைத்திருக்கிறார்கள் போலும்.

அவர் காட்சிகளை கத்திரி போட்டாலும் படத்துக்கு பங்கம் வராது

அதைப்போலவே யானை வளர்க்கும் யோகிபாபு கதாபாத்திரமும் தேவையில்லாத ஆணிதான்.

நீதிபதியாக வரும் ரேய்ச்சல் ரெபேக்கா, போலீஸ் ஏட்டாக வந்த காளை பாண்டியன், கிராமத்து ஆசாமிகளாக வந்த முனீஸ்வரன், காளிமுத்து கதாபாத்திரங்கள் அருமை.

வயதான் கிழவிகள் தொடங்கி ஆடு மாடு, யானை மயில் கோழி என அனைத்தையும் தன் கேமராவில் யதார்த்தமாக பதிவு செய்த மணிகண்டன் உழைப்புக்கு ஒரு சபாஷ்.

கடைசி விவசாயி பார்த்தால் ஒரு யதார்த்த கிராமத்தில் வாழ்ந்து திரும்பிய அனுபவம் ஏற்படும்.

மொத்தத்தில் கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்!

– கோடங்கி

மதிப்பீடு  3.5/5

 

338 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன