செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்தாகுமா? சிறப்பு அதிகாரி பத்ரா பேட்டி

ஆர்.கே. நகரில் பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா தெரிவித்துள்ளார். இன்று சென்னை வந்த பத்ரா, தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், பணப்பட்டுவாடா புகார்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என்றார். தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, இப்போதே அதுகுறித்து முடிவெடுக்க முடியாது என்று பத்ரா தெரிவித்தார்.
பத்ரா, சென்னையில் நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், அரசியல் கட்சியினரின் கருத்துக்களை கேட்பதற்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது என்றார்

407 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன