செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு-பிரபுதேவா..!

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் மூலம் பிரபு தேவா – பிரபு இருவரும் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கின்றனர்.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம் ‘சார்லி சாப்ளின்-2’.
கடந்த 2002-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’. இந்த படத்தில் பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். காமெடி படமாக உருவான இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் இளைய திலகம் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதற்கட்டப படப்பிடிப்பு கோவாவில் முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு  தொடங்கியது. அதில் பிரவுதேவா – பிரபு 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.
முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்குகிறார்.
அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு செளந்தர்ராஜன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார்.
பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக பிரபுதேவா குடும்பமும், நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகும் போதும், அங்கு போய் சேர்ந்த பிறகு நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே  `சார்லி சாப்ளின்-2′.  திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ் என்று படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார்.
456 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன