ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது!

வேலூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகியது.

காட்பாடி அருப்புமேடு 12-வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 56 வது பூத்தில் எந்திரம் பழுதானது.

வேலூர் கொசப்பேட்டை மடத்தெருவில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 39 வது வார்டில் 195 வது பூத்தில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், 104 வது பூத்திலும் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. அதில் உடனடியாக 4 எந்திரங்கள் சரி செய்யப்பட்டன. 2 வாக்குச் சாவடிகளில்மாற்று எந்திரம் வைக்கப்பட்டது. இதையடுத்து 30 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

342 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன