
பதவியை ராஜினாமா செய்த செல்வமணி!
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இமயம் அணி சார்பில் இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், புதுவசந்தம் அணி சார்பில் இயக்குனர் செல்வமணி தலைமையில் ஒர் அணியும் களத்தில் இருக்கிறது.
இதில் பாக்யராஜ் அணிக்கு பாரதிராஜா ஆதரவு தெரிவித்திருக்கிறார். செல்வமணிக்கு விக்ரமன் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
பாக்யராஜை பொய்யர் என செல்வமணியும், செல்வமணியை போர்ஜெரி பேர்வழி என பாக்யராஜும் ஒருவரை ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளோடு பொது மேடைகளில் குற்றம்சுமத்தி பேசி வருகிறார்கள்.
செல்வமணி தமிழ் சினிமாவில் பல சங்கங்களில் பதவியில் இருக்கிறார். அதில் குறிப்பாக எழுத்தாளர்கள் சங்கத்தில் துணைத்தலைவராக இருக்கிறார். விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்க்கார் படக்கதை திருட்டுக்கதை என புகார் எழுந்தது.
இது தொடர்பாக வருண் ராஜேந்திரன் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை விசாரித்த பாக்யராஜ் இரண்டு கதைகளும் ஒரே கருவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்றும்,
உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என சங்க தலைவர் பாக்யராஜ் கடிதம் கொடுத்தார்.
இந்த விவகாரத்தில் பாக்யராஜுக்கு எதிராக இயக்குனர்கள் மனோஜ்குமார், செல்வமணி உட்பட பலர் செயல்பட்டதால் அதிருப்தி அடைந்த பாக்யராஜ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின் அனைவரு வருத்தம் தெரிவித்ததால் மீண்டும் தலைவராக தொடர்கிறார் பாக்யராஜ்.
கடந்த சில தினங்களுக்கு முன் தனது அணியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ் “சர்க்கார்” கதை திருட்டு விவகாரத்தில் நடைபெற்ற தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி ஆவேசமாக பேசினார்.
அதோடு, செல்வமணி இதுவரை இயக்கிய படங்கள் அவர் இயக்கியதுதானா என்ற சந்தேகத்தையும் பாக்யராஜ் எழுப்பி இருந்தார்


இந்த சுழலில் எழுத்தாளர் சங்கத்தில் இருந்து தனது துணைத்தலவர் பத்வியை திடீரென இயக்குனர் செல்வமணி ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி இருக்கிறார். இந்த ராஜினாமாவுக்கான உணமையான காரணம் வேறாக இருதாலும்,
இந்த ராஜினாமா விவகாத்திற்கு எழுத்தாளர் சங்க தலைவர் என்ற முறையில் பாக்யராஜ் ஒரு கடிதத்ததை இயக்குனர் செல்வமணிக்கு எழுதியிருக்கிறார். அதில் தான் ஆவேசமாக பேசியதற்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார்.
இந்தவிவகாரம்தான் இப்போது தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
