நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் சங்க தலைவராக நடிகர் நாசர், துணைத் தலைவராக பூச்சி முருகன்,
பொதுச்செயலாளராக விஷால் பொருளாளராக கார்த்திக் உள்ளிட்ட வெற்றிபெற்ற 29 உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்ச்சி முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், ‘நடிகர் சங்கத் தேர்தல் வரலாற்றில் 3 ஆண்டுகள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் சங்கத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி பத்மநாபன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
எங்கள் பக்கம் நியாயம், நேர்மை உள்ளது.
பொறுமையாக காத்திருந்து வெற்றியை பெற்றதில் பெருமையடைகிறோம்.
நடிகர் சங்க புதி...
தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் ரூ.10,000-க்கான காசோலையை நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தியிடம் சங்க தலைவி கவிதா, செயலாளர் கோடங்கி உட்பட நிர்வாகிகள் வழங்கினர்.
முன்னதாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்காக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கேக் கொண்டுவரப்பட்டு, அதை புதிய தலைவர் நாசர் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
...
20 கோடி தேவை கவுரவ பிச்சை எடுக்கவும் தயார்... 3 ஆண்டுகள் முழுமையாக செயல்படுவோம் - நடிகர் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் பேச்சு
https://youtu.be/9yCFTNnCmIE
நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
2015ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விஷால் களமிறங்கிய போது வார்த்தை மோதல்கள் உச்சத்தை எட்டி இருந்தது.
மாறி மாறி ஒருமையில் அழைப்பதும் அவ்வபோது நடந்தது. ராதாரவி தரப்பில் களமிறக்கப்பட்ட சிம்புவும் விஷாலை நரி என கூறி தேர்தல் சூட்டை அதிகப்படுத்தினார். ஏறத்தாழ ஒரு பொது தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.
வெறும் 3 ஆயிரம் வாக்குகளை மட்டுமே கொண்ட நடிகர் சங்க தேர்தல் தமிழக சினிமா களத்தில் முக்கிய கவனம் பெற 2015 தேர்தல் முக்கிய காரணமாக மாறியது.
ஒரு கட்டத்தில் ராதிகா, விஷாலை சாதி ரீதியக அழைத்து சாதிய, மொழி சண்டைக்கு வித்திட சாதிய மற்றும் இனவாதம் நடிகர்களுக்கும் பிரதானப்பட்டது.
எனினும் இந்த தேர்தலில் விஷா...
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022-ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த 2019 ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது.
இதில் நடிகர் நாசர் தலைமையிலும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலும் இரு அணிகள் நேர் எதிராக தேர்தலை சந்தித்தது. முறையான வாக்காளர் பட்டியலை தயாரிக்காமல் தேர்தலை நடத்தியதால், தேர்தல் நடத்தை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
இதனால் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு, தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது.
அதன்பின் வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார், அதுவரை அரசு நியமித்த தனி அதிகாரி சங்கத்தை நிர்வகிப்பார் என உத...
பதவியை ராஜினாமா செய்த செல்வமணி!
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இமயம் அணி சார்பில் இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், புதுவசந்தம் அணி சார்பில் இயக்குனர் செல்வமணி தலைமையில் ஒர் அணியும் களத்தில் இருக்கிறது.
இதில் பாக்யராஜ் அணிக்கு பாரதிராஜா ஆதரவு தெரிவித்திருக்கிறார். செல்வமணிக்கு விக்ரமன் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
பாக்யராஜை பொய்யர் என செல்வமணியும், செல்வமணியை போர்ஜெரி பேர்வழி என பாக்யராஜும் ஒருவரை ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளோடு பொது மேடைகளில் குற்றம்சுமத்தி பேசி வருகிறார்கள்.
செல்வமணி தமிழ் சினிமாவில் பல சங்கங்களில் பதவியில் இருக்கிறார். அதில் குறிப்பாக எழுத்தாளர்கள் சங்கத்தில் துணைத்தலைவராக இருக்கிறார். விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்க்கார் படக்கதை திருட்டுக்கதை என புகார் எழுந...
நீ எடுத்த படம் எல்லாம் நல்லா ஓடிச்சுன்னு சொன்னாங்க அது எல்லாம் நீதான் எடுத்தியா என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது என ஆர்.கே.செல்வமணியை, இயக்குநர் கே.பாக்யராஜ் விமர்சித்துள்ளார்.
தற்போது உள்ள இயக்குனர் சங்க நிர்வாகிகளை சந்திப்பதே மிக சவாலான ஒன்றாக இருக்கிறது.
தொலைபேசியில் கூட அணுக முடியவில்லை ஆனால் நான் நீண்ட ஆண்டுகளாக ஒரே தொலைபேசி எண்ணை தான் வைத்துள்ளேன் நான் வெற்றிபெற்றால் இயக்குனர்கள் எந்த பிரச்சனை என்றாலும் என்னை அழைக்கலாம் என இமயம் அணி தலைவர் வேட்பாளர் கே.பாக்யராஜ் பேசினார்.
வரும் 27ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிட உள்ளது .
தலைவர் பதவிக்கு பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் இயக்குன...