புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

நடிகர் சங்க தேர்தல் நாசர்-விஷால்-கார்த்தி-பூச்சிமுருகன் கூட்டணி மீண்டும் அபார வெற்றி!

 

நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

2015ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விஷால் களமிறங்கிய போது வார்த்தை மோதல்கள் உச்சத்தை எட்டி இருந்தது.

மாறி மாறி ஒருமையில் அழைப்பதும் அவ்வபோது நடந்தது. ராதாரவி தரப்பில் களமிறக்கப்பட்ட சிம்புவும் விஷாலை நரி என கூறி தேர்தல் சூட்டை அதிகப்படுத்தினார். ஏறத்தாழ ஒரு பொது தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.

வெறும் 3 ஆயிரம் வாக்குகளை மட்டுமே கொண்ட நடிகர் சங்க தேர்தல் தமிழக சினிமா களத்தில் முக்கிய கவனம் பெற 2015 தேர்தல் முக்கிய காரணமாக மாறியது.

ஒரு கட்டத்தில் ராதிகா, விஷாலை சாதி ரீதியக அழைத்து சாதிய, மொழி சண்டைக்கு வித்திட சாதிய மற்றும் இனவாதம் நடிகர்களுக்கும் பிரதானப்பட்டது.

எனினும் இந்த தேர்தலில் விஷால் அணி அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்று நாசர் தலைமையில் விஷால் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.

இந்த செயற்குழு பதவிக்காலம் முடிந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் 2019 ஆம் ஆண்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னர் நீதிபதியை நியமித்து தேர்தலை அறிவித்தது செல்லாது என்ற புகாரோடு புதிய தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியது.

தேர்தல் நடைபெறுமா நடைபெறாத என்ற குழப்பத்திற்கு இடையே 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குரிமை புறக்கணிக்கப்பட்டது,

பதவிக்காலம் முடிந்து தேர்தலை அறிவித்தது என பல்வேறு பிரச்சினைகள் அடுத்தடுத்து நீதிமன்றக் கதவுகளைத் தட்ட நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவின் முடிவுகள் பேங்க் லாக்கரில் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டது. பூட்டி வைக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் விஷால் அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு விஷால் அணி தரப்பில் போட்டியிட்டவர்கள் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷாலுக்கு 1720 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐசரி கணேஷுக்கு 1032 வாக்குகளும்கிடைத்தன.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்திக்கு 1530 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரசாந்திற்கு 794 வாக்குகளும் கிடைத்தன.

துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் 1612 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து களத்தில் நின்ற குட்டி பத்மினிக்கு 1015 வாக்குகள் கிடைத்தன.

இன்னொரு துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட கருணாஸ் 1605 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உதயா 973 வாக்குகள் பெற்றார்.

 

372 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன