வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

அரசியல் கட்சியால் சினிமாவுக்கு பிரச்னை வந்தால்… நடிகர் கார்த்தி அதிரடி பதில்!

 

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் சங்க தலைவராக நடிகர் நாசர், துணைத் தலைவராக பூச்சி முருகன்,

பொதுச்செயலாளராக விஷால் பொருளாளராக கார்த்திக் உள்ளிட்ட வெற்றிபெற்ற 29 உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்ச்சி முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், ‘நடிகர் சங்கத் தேர்தல் வரலாற்றில் 3 ஆண்டுகள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் சங்கத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி பத்மநாபன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

எங்கள் பக்கம் நியாயம், நேர்மை உள்ளது.

பொறுமையாக காத்திருந்து வெற்றியை பெற்றதில் பெருமையடைகிறோம்.

நடிகர் சங்க புதிய கட்டிடம் உட்பட அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மனதை திடப்படுத்திக் கொண்டு பணியாற்றுவதே எங்கள் நோக்கம்.

வாக்கு எண்ணிக்கையை நடத்த டென்னிஸ் கோர்டைத் தவிற மற்ற அனைத்து கோர்டுக்கும் சென்றுள்ளோம்.

இதன் காரணமாகவே என் திருமணமும், நடிகர் சங்க புதிய கட்டிடப் பணியும் முடியாமலேயே உள்ளது என்றும் தெரிவித்தார்.

 

 

சென்னைக்கு வருபவர்கள் சுற்றுலாத் தளங்களை காண்பதுபோல் நடிகர் சங்க புதிய கட்டிடத்தை பார்க்கும் அளவுக்கு உருவாக்கவுள்ளோம்.

நாடக நடிகர்களின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டுக்காகவும் உழைப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

சொன்னதை செய்வோம், செய்து காட்டுவோம் என உறுதி அளித்த நடிகர் விஷால்  இதுவரை 60% பணிகள் நிறைவடைந்துள்ளது.

இன்னும் 4 மாதங்கள் நேரம் கிடைத்திருந்தால் பணிகள் முடிவடைந்திருக்கும்.

ஆனால் தற்போது 3 ஆண்டுகள் பணிகள் இழுத்தடிக்கப்பட்டதால் செலவு 25% கூடியுள்ளது.

அதாவது இன்னும் 21 கோடி தேவைப்படுகிறது என்றும் தேவையான தொகையைத் திரட்ட அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது.

கவுரவமாக பிச்சையெடுத்தாவது கட்டிடப் பணிகளை நிறைவு செய்வோம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘முதலமைச்சரிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

விரைவில் கடிதமாகவும் தங்கள் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொடுக்கவுள்ளோம்.

எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் காழ்புணர்ச்சி இல்லை.

ஐசரி கணேஷ், சரத் குமார் ஆகியோரிடமும் நிதி உதவி கிடைக்குமாயின் பெற்றுக்கொள்வோம்.

எல்லாவற்றிலும் இணைந்தே செயல்பட எண்ணுகிறோம்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கார்த்திக், ‘அனைவரும் சேர்ந்து தான் கோயில் கட்ட முடியும் என்பதுபோல் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரிடமும் நேரடியாக சந்தித்து பேசிதான் நிதியை திரட்டவுள்ளோம்.

கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடி உள்ளிட்ட அனைத்தையும் கலந்தாலோசித்து பணிகளை தொடங்க இன்னும் 3 மாதங்கள் தேவைப்படும் எனவும் தணிக்கை குழு சான்று பெற்ற திரைப்படங்களுக்கு அரசியல் கட்சிகள் மூலம் வரும் தொடர் மிரட்டல்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க உதவுவோம் என்றும் தெரிவித்தார்.

அவர் கொரோனா காலத்தில் உயிரிழந்த நாடக நடிகர்கள் உள்ளிட்டோருக்கு தேவையான உதவிகள் செய்ய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அழைத்தார்.

தொடர்ந்து பேசிய பூச்சி முருகன், ‘சங்க விதிப்படி பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவி காலம் உள்ளது.

எனவே அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாங்கள் கட்டாயம் பதவியில் இருப்போம்.

நலிந்த நடிகர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட இடத்தில் மண்டபம் கட்டி தங்க வைக்க திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

முன்னதாக சூர்யா நடித்த ஜெய்பீம், எதற்கும்துணிந்தவன் படங்களுக்கு பாமக எதிர்ப்பு தெரிவித்ததை கேள்வியாக எழுப்பியதற்கு கார்ஹ்தி கொடுத்த அதிரடி பதில்தான் “சட்ட நடவடிக்கை எடுக்கும் குழு அமைப்போம்” என்பது. இதன் மூலம் பாமகவுக்கு கார்த்தி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

675 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன