புதன்கிழமை, செப்டம்பர் 30
Shadow

கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநர் To மேயர்… அசர வைக்கும் காங்கிரஸ்!

கோயில் நகரமான கும்பகோணத்தை தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரிச்சு தனி மாவட்டமா அறிவிக்க வேண்டும் என கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைக்கபட்டுவருது.

அதை அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

மாநகராட்சி ஆனபிறகு நடந்த முதல் தேர்தல் என்பதால் முதல் மேயர் யார் என்கிற எதிர்ப்பார்ப்பு திமுக வட்டாரத்தில் எழுந்துச்சு. கும்பகோணம் மாநகர் பொருப்பாளர் சு.ப.தமிழழகனுக்கு மேயர் வாய்ப்பு அதிகம் என பலதரபட்ட மக்களிடமும் பேசப்பட்டுச்சு.

ஆனால் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பொறுப்பை திமுக வழங்கிய நிலையில் காங். வேட்பாளராக ஆட்டோ ஓட்டுநராக இருந்துவரும் சரவணன் என்பவரை அறிவித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.

சரவணன் கும்பகோணம் துக்காம்பாளைத்தை சேர்ந்தவர், அவரது தந்தை கந்தசாமி.

பத்தாம் வகுப்பு மட்டுமே படிச்சிருக்கும் சரவணன் காங்கிரஸ் கட்சியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வாரார். நகர துணை தலைவராகவும் இருந்துவருகிறார்.

இன்றுவரை சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டிவருகிறார். “மேயராகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்னு கனவிலும்கூட நினைக்கல,” என்கிறார் சரவணன்.

“சாதாரண குடும்பத்தில் தினசரி வருமானத்துக்கே சிரமப்படும் எங்க குடும்பத்துக்கு இப்படியொரு கவுரவம் கிடைக்கும்னு கனவிலும் நினைக்கல, இந்த தேர்தலில்தான் முதன் முறையாக போட்டியிட்டார். வெற்றி பெற்றதுமே மேயராக அறிவித்திருப்பது அளவிடமுடியாத சந்தோஷமாக இருக்கு” அப்படீங்கிறார் சரவணனின் மனைவி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன