வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

குஜராத் தேர்தலில் நோட்டாவுக்கு 5.5 லட்சம் வாக்குகள்… ஆளும் பாஜக அதிர்ச்சி

குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 49.1 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன. எந்த வேட்பாளரையும் ஆதரிக்காத 5.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர். இது ஆளும் பாஜகவை கடும் அதிர்ச்சியாக்கி உள்ளது.

 

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. 99 தொகுதிகளில் வெற்றி பெற்று 6-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளைப் பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் பா.ஜ.க. 49.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 14724427. அடுத்து காங்கிரஸ் கட்சி 41.4 சதவீதம், அதாவது 12438937 வாக்குகளைப் பெற்றுள்ளது.
நோட்டாவுக்கு 551615 வாக்குகள் பதிவாகி உள்ளன. இது மொத்த வாக்குப்பதிவில் 1.8 சதவீதம் ஆகும். இது தேசிய கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகளைவிட அதிகம் ஆகும். பகுஜன் சமாஜ் கட்சி 207007 வாக்குகளும், தேசியவாத காங்கிரஸ் 184815 வாக்குகளும் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
417 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன