வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

கதை திருட்டு போய் வசன திருட்டு புகாரில் சிக்கிய இயக்குனர் லிங்குசாமி…

 


தமிழ் சினிமாவில் கதை திருட்டு புகார் ஒன்றும் புதுசு இல்லை… பிரபல நடிகர் அல்லது இயக்குனர் படங்கள் ரிலீஸ் நேரத்தில் இப்படி திருட்டு கதை புகார்கள் கிளம்பும்…
அதில் பல உண்மையாக இருந்தாலும் கரன்சி பலம்… காவாலிதனம் இப்படி ஏதாவது ஒன்றால் அந்த புகார் கிடப்பில் போடப்படும்.

இந்த புகாரும் ஒரு திருட்டு புகார்தான்… இந்த முறை கதைக்கு பதில் வசனத்தை திருடி இருக்கிறார்கள்.

எப்படி…

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தின் 2ம் பாகம் இப்போது எடுத்து வருகிறார்கள்.
தயாரிப்பு ஹீரோ இரண்டும் விஷால்… இயக்கி தர வேண்டியது லிங்குசாமி.

மதுரை கதை என்பதால் மதுரை வட்டார மொழியில் வசனம் இருந்தால் நலம் என கருதிய இயக்குனர் தரப்பு அங்கே தேடி இங்கே தேடி கடைசியில் கண்டு பிடித்தது… பங்காளியை…

இவர் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர்… சினிமாவில் பி.ஆர்.ஓ., ஆர்ட்டிஸ்ட் மேலாளர், தயாரிப்பு நிர்வாகி, சமீபத்திய நிகழ்வு நடிகர் (மிக மிக அவசரம்)

இப்படி பண்முக திறமைசாலி சண்டக்கோழி 2 படத்துக்கு வட்டார மொழியில் வசனம் எழுதி கொடுத்து விட்டார்.

இதற்காக இவருக்கு பேசிய சம்பளம் 3 லட்ச ரூபாய்.

அட்வான்ஸ் ஆக கைச்செலவுக்கு ஒரு தொகை கொடுத்து வசனத்தை எழுதி வாங்கிய இயக்குனர் லிங்குசாமி தரப்பு மிச்ச தொகை தராமலேயே ஷூட்டிங் கிளம்பி விட்டது.

பல முறை கேட்டும் பணம் வராமல் போக பிரச்சினை விஷால் கவனத்திற்கு போனது… ஆனால் அவரோ “இயக்கம் அனைத்தும் லிங்குசாமி அவர்கள் பொறுப்பில் விட்டு அதற்கான தொகை கொடுத்து விட்டேன். வசனம் எழுதிய தொகை எல்லாம் இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும்” என நழுவி இருக்கிறார்.

இயக்குனர் லிங்குசாமி தரப்பில் பேசும் போஸ் நிமிடத்திற்கு ஒரு காரணம் சொல்லி தவிர்க்கிறார்.

பணத்தை திருடும் கூட்டம் அதிகம் இருக்கும் தொழில் சினிமா என்பது மெல்ல மறைந்து பணத்துக்காக அடுத்தவர் அறிவை திருடும் கும்பல் அதிகரிக்கிறதோ கோலிவுட்டில் என்ற அச்சம் ஏற்ப்பட்டுள்ளது.

லிங்குசாமி தரப்பில் விசாரித்தால் அவர் வசனங்களை
பயன்படுத்தவில்லை என்கிறார்கள்.

எது எப்படியோ… ராவணன் சிறை எடுத்து கடல் தாண்டிய பின் மீட்கப்பட்டாலும் சீதையின் கற்பு சோதனைக்குள்ளாக்கப்பட்டது போல…

வசனம் எழுதிய கலைஞனுக்கு உழைப்புக்கு ஊதியம் அளிப்பது தான் நியாயம்…

ஆனால் இங்கே தான் நியாயங்களுக்கு இடமே இல்லையே…

சிறையெடுத்த ராவணன் சுண்டு விரலும் படாமல் இருந்தாலும் அவனை அரக்கன் என்றும்… மனைவி கற்புக்கரசி என தெரிந்தும் சந்தேகப்பட்ட ராமன் கடவுள் என்று போற்றுகிற உலகம் என்பதால்….

நியாயமாரே…. பேசிய சம்பளத்தை தராமல் இழுத்தடிப்பது நியாயமாரே…..

– கோடங்கி

785 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன