சனிக்கிழமை, மே 2
Shadow

வன்னியர் பொது சொத்துக்கள், ராமதாஸால், ஆக்கிரமிக்கப்படுகிறதா❓ விற்க்கபடுகிறதா❓ -வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம் தமிழக அரசுக்கு கடிதம்.


வன்னியர் கல்வி அறக்கட்டளையையும், அதைச் சார்ந்த கல்வி நிறுவனங்களையும், சொத்துக்களையும், மீட்டெடுத்து, தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள்(பாதுகாத்தல் மற்றும் பேணி வருதல்) வாரியத்தில், 04.02.2019 அன்று, தமிழ்நாடு, அரசிதழில் வெளியிடப்பட்ட, சட்டம் 44/2018 ன் படி, இணைத்திட, கோரும் மனு.
******
விடுநர்,

இராம.நாகரத்தினம்– தலைவர்– வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம்.???? 9444068943.

பெறுநர்,

மாண்புமிகு,
தமிழக முதலமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை.600009.

பொருள்:-

தமிழகம் உள்ளிட்ட, உலக வன்னியர்களிடம் பெறப்பட்ட, நிதியிலிருந்து, பதிவு செய்து, ஆரம்பிக்கப்பட்ட, வன்னியர் கல்வி அறக்கட்டளையும், அதனைச் சார்ந்த கல்வி நிறுவனங்களையும், சொத்துக்களையும், ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன், சட்டம் 44/2018 ன் அடிப்படையில், இயங்கிக்கொண்டிருக்கும், தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரியத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோருதல்.

ஐயா,

வன்னியர் கல்வி அறக்கட்டளை, வன்னியர்களுக்காக,‌ தமிழகம் உள்ளிட்ட, உலக வன்னியர்கள் கொடுத்த நிதியால், உருவாக்கப்பட்டது.

வன்னியர் கல்வி அறக்கட்டளை, 28.மைலம் ரோடு திண்டிவனம் என்ற, அலுவலக விலாசமாக, சார்பதிவாளர் அலுவலகம் திண்டிவனம்-2 ல், BOOK IV ல், 47/2000 எண்ணாக, 25.06.2000 அன்று, பதிவு செய்யப்பட்டது.

அந்த பதிவு ஆவணத்தில்,
இந்த அறக்கட்டளை, “VANNIAR EDUCATIONAL TRUST” என்று அழைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த, அறக்கட்டளை, பதிவு ஆவணத்தில், Dr.S.ராமதாஸ் சேர்மன் & வாழ்நாள் நிர்வாக அறங்காவலர் என்றும், Dr.R.அன்புமணி, Dr.R.கோவிந்தசாமி, Dr.P.சுந்தர்ராஜன் ஆகியோர், வாழ்நாள் அறங்காவலர்கள் என்றும், பதிவு செய்யப்பட்டுள்ளது.

7 அறங்கா வலர்களில், மீதமுள்ள,
3 அறங்காவலர்கள், 1)பா.ம.க தலைவர், 2)வன்னியர் சங்க தலைவர்,
3)சமூக முன்னேற்ற சங்கம்(SIS) தலைவர்,
ஆகியோர் அறங்காவலர்களாக, அங்கம் வகிப்பார்கள் என்றும், அவர்கள் மாற்றத்துக்கு உட்பட்டவர்கள் என்றும், எண்:47/25.06.2000 பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்க்கண்ட,
பதிவு செய்யப்பட்ட, வன்னியர் கல்வி அறக்கட்டளையில் தான், பொறியில் கல்லூரி, கலைக்கல்லூரி, சட்டக்கல்லூரி மற்றும் பயிற்சி கல்லூரி,
ஆகிய கல்வி நிறுவனங்கள், திண்டிவனத்தை அடுத்த, “கோனேரிக் குப்பம்” வளாகத்தில், நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தான், வன்னியர் கல்வி அறக்கட்டளையின் பெயர் பலகையில், 10.01.2020 அன்று, அதிரடியாக, ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த, அறக்கட்டளை பெயர் மாற்றம், வன்னிய சமுதாயத்திடையே, ஓர் பேரதிர்வை ஏற்ப்படுத்தியது.

அந்த சூழலை, சமாளிக்க,
பா.ம.க தலைவர், G.K.மணி அவர்கள், 14.01.2020 அன்று, ஒரு அறிக்கையை வெளியிட்டார்,

மருத்துவர் ஐயா அவர்களின், உழைப்பையும், தியாகத்தையும், பெருமைப்படுத்தும் விதமாகத்தான், வன்னியர் கல்வி அறக்கட்டளை, Dr.ராமதாஸ் கல்வி அறக்கட்டளையாக பெயர்மாற்றம் செய்யப்பட்டது என்று, வன்னியர்களை சமாதானப்படுத்தும் விதமாக,
G.K.மணி அவர்கள், ஒரு தற்க்காலிக அறிவிப்பை, அப்போது வெளியிட்டார்,

பின்னர், 01.08.2020 தேதியிட்ட கடிதம் ஒன்றை G.K.மணி அவர்கள், தமிழ்நாடு வன்னிய குல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரியத்தின் செயலாருக்கு அனுப்பியிருக்கிறார்.

அந்த கடிதம், “ராமதாஸ் கல்வி அறக்கட்டளை”, 28.மயிலம் ரோடு, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம், என்ற விலாசமிட்ட, லெட்டர் பேடில், டைப் செய்து அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்த கடிதத்தில், “ராமதாஸ் கல்வி அறக்கட்டளை”, ராமதாஸ் அவர்களால், தொடங்கப்பட்ட, தனி அறக்கட்டளையாகும்.
ஜாதி, மதம், இனம், கடந்த, எல்லா தரப்பு மக்களின் நலன் கருதி இயங்கிவரும் அறக்கட்டளையாகும்.
ஆகவே, அறக்கட்டளையை, தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரியத்தில் பதிவு செய்ய, எந்த முகாந்திரமும் இல்லை என்று, G.K.மணி- சேர்மன் (Chairman) என்று கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறார்.

மேற்க்கண்ட, G.K.மணி அவர்கள் அனுப்பிய, 01.08.2020 தேதியிட்ட கடிதத்தின் மீது எந்த, மேல் நடவடிக்கையும் எடுக்காமல், வாரியத் தலைவர் G.சந்தானம் (IAS-Reted) அவர்கள், தன், வாரிய “தலைவர்” பதவிகாலத்தை, முழுமையாக, பூர்த்திசெய்து, சென்றுவிட்டார்.

G.K மணி அவர்களால் அனுப்பப்பட்ட, கடிதத்தால், திண்டிவனம் கோனேரி குப்பத்தில் இயங்கிவரும் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கான, கல்வி நிறுவனங்கள், ராமதாஸ் கல்வி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டதா❓ அல்லது விற்க்கபட்டதா❓ என்ற கேள்வி, தற்ப்போது, வன்னிய சமுதாய மக்களிடையே, எழுந்துள்ளது.

வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கான நிதியானது, “கல்வி வளர்ச்சிக் கட்டிட நிதி ரசீது” என்று அச்சிடப்பட்ட ரசீதுகள் மூலம், தமிழ்நாடு உள்ளிட்ட, வெளிநாட்டில் வாழும் வன்னியர்களிடமிருந்தும் பெறப்பட்டது.(அதற்க்கான ஆதாரங்களும் எங்களிடம் இருக்கிறது.)

வன்னியர் அறக்கட்டளையின் பதிவு ஆவணத்தில், Dr.S.ராமதாஸ் சேர்மன் (Chairman) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்ற “லெட்டர் பேடில்”, அறக்கட்டளை சேர்மன் (Chairman), G.K.மணி‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமதாஸூம், G.K.மணியும், வன்னியர் கல்வி அறக்கட்டளையையும், அதன் அடிப்படையில் இயங்கிக்கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களையும், சொத்துக்களையும், தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரியத்தில், பதிவு செய்து இணைக்காமல், தனி மனித ஆக்கிரமிப்பு அறக்கட்டளையாக மாற்ற,
பெயர் மாற்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆகவே,
தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடை வாரியத்தில், வன்னியர் கல்வி அறக்கட்டளையை பதிவு செய்து இணைத்து, வன்னியர் கல்வி அறக்கட்டளையின் கல்வி நிறுவனங்களையும் சொத்துக்களையும், மீட்டெடுக்க, தமிழக அரசு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம், கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,

இராம‌.நாகரத்தினம்– தலைவர்–
வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம்????
9444068943

இணைப்பு:-

1)வன்னியர் கல்வி அறக்கட்டளையின் பதிவு ஆவண நகல்,

2)வன்னியர் கல்வி அறக்கட்டளை தொடங்க,
நிதி வசூலுக்கு, ராமதாஸால் கொடுக்கப்பட்ட விளம்பரம்.

3) நிதி வசூலுக்கு, கொடுக்கப்பட்ட, ஒரு ரசீது நகல்.

4)வன்னியர் கல்வி அறக்கட்டளை, ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று,
ஏன் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதற்க்கான, G.K.மணி அவர்களின், 14.01.2020 தேதியிட்ட,
விளக்க அறிக்கையின் நகல்.

5) G.K.மணி அவர்கள், தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலையத் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடைகள் வாரியத்துக்கு அனுப்பிய, 01.08.2020 தேதியிட்ட கடிதத்தின் நகல்.

6)வன்னியர் கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட, வன்னியர் பொது சொத்துக்களின் பட்டியல்.

நகல்:–

1) The Principal Secretary to Government, பிற்ப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை, தலைமைச் செயலகம்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை.600009.

2)திரு.செயலாளர் அவர்கள்,
தமிழ்நாடு வன்னிய குல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக் கொடைகள் வாரியம்.
1/1(1) மேயர் இராமநாதன் சாலை(கிழக்கு), எழும்பூர்,
சென்னை- 600008

599 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன