
இந்தியாவில் நீதித்துறை நம்பிக்கையாக இல்லை என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் சங்கங்களுக்கு சட்டப்புத்தகம் வழங்கும் நிகழ்வு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சிலில் நடைபெற்றது.
இதில் , சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர்.
நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், “படித்தவர்களுக்கு அடையாளம் எந்த இடத்தில் பேச வேண்டும் என்பதை அறிந்து பேசுவது தான்.
பொருளாதாரம் விஞ்ஞானம், திராவிட தத்துவம் இவை இரண்டையும் இணைத்து செய்வது எங்கள் அடையாளம், கடமை, பெருமை.
இந்தியாவில் நீதித்துறை அவ்வளவு நம்பிக்கையாக இல்லை. எனினும், மாநில அரசின் கையில் இருக்கும் அதிகாரங்களைக் கொண்டு பொருளாதாரத்தில் முதல்வர் வழிகாட்டுதல் படி சில நல்ல மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
பழைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இங்கே பதவியில் இருந்த போது அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அரசியல் காரணங்களால் ஏதேனும் சிக்கல்கள் வருமோ என தயங்கி சந்திக்கவில்லை.
அதற்குள்ளாகவே அவரை இங்கிருந்து தூக்கிவிட்டார்கள். அதன் பின் அவரே அழைத்தார். நேரில் சந்தித்தேன்.
தமிழக நீதித்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சீர்திருத்தங்கள் குறித்த பட்டியலை என் கையில் கொடுத்தார். கட்டாயம் அதை செய்து முடிப்போம் என்றார்.
