ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

அரைகுறை ஆடையில் 50 பெண்கள் ஆட்டம்… காங்.,எம்.எல்.ஏ.வின் ரிசசார்ட்டில் மது, மாது கும்மாளம்?

 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள தனியார் ரிசார்ட்டில் பெண்கள் நடனம், மதுவிருந்து ஆகியவை சட்டவிரோதமாக நடைபெற்றதாகவும், இந்த விருந்தில் பங்கேற்றதாக 50 பெண்கள் உட்பட 500 பேரைப் போலீசார் சுற்றி வளைத்தனர்.

வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாவுக்கு சொந்தமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் ஆர்ச்சிட் ரிசார்ட் உள்ளது.

இங்கு ஹோலி பண்டிகையன்று அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாகவும் அந்த மது விருந்தில் பலவிதமான போதை மருந்து பயன்படுத்துவதாகவும் தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலைத் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மது ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் நள்ளிரவை கடந்து விடிய விடிய மூன்று மணிவரை சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த மேனஜர் சைமன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மது விருந்தில் கலந்து கொண்ட சுமார் 500 ஆண்கள், நடனமாடிய சுமார் 50 பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் சிறைபிடித்து வைத்தனர்.

இந்த தகவலை அறிந்த வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலாளா சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றார்.

அதன் பின்னர் எல்லாமே தலைகீழாக மாறியதாக கூறப்படுகிறது.

தாம்பரம் காவல் ஆணையர் ரவி அங்கு வந்தார். அவர் அங்கு இருந்த இளைஞர்களிடம், இளம் எண்களிடமும் இனி இது போல் நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுறை சொல்லி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

510 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன