
- சுமி நகரில் உள்ள சுமிகிம்ப்ரோம் ரசாயன ஆலையில் இருந்து அமோனியம் கியாஸ் கசிவதாக அந்நகர கவர்னர் தெரிவித்துள்ளார்.
- உக்ரைனின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
- மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்ற ரஷியாவின் எச்சரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது.
-
உக்ரைன்- ரஷியா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை இன்று பேரலுக்கு 2 டாலர் உயர்ந்துள்ளது.
-
சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தின்படி கச்சா எண்ணெய் தயாரிக்க முடியாததால் விலை உயர்வதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
- மரியுபோல் நகரில் ரஷியா-உக்ரைன் படையினர் இடையே தீவிர சண்டை நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள மக்கள் உணவு, தண்ணீரின்றி அவதியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அந்நாடு குறிப்பிட்டுள்ளது.
369 Views
