புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

போக்குவரத்துதுறை அமைச்சரானார் சிவசங்கர்… இராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின்படி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜகண்ணப்பன் இருந்து வந்தார்.

அண்மையில், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் (பிடிஓ) ராஜேந்திரன் என்பவரை சாதி பெயரை சொல்லி ராஜகண்ணப்பன் விமர்சித்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர்) அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

470 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன