திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

‘குடிபட்வா’ பண்டிகை கொண்டாட கொரோனா கட்டுப்பாடுகளை 100 சதவீதம் விலக்கிய மாநிலம்!

2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. கொரோனா பரவலின் போது மகாராஷ்டிரா அதிக அளவில் பாதிக்கப்பட்டது.

அங்கு தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.

இந்நிலையில், பொது இடங்களில் நாளை (ஏப்.2) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா மாநில புத்தாண்டான ‘குடிபட்வா’ பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் பொது இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று முதல்வர் தாக்கரே தெரிவித்துள்ளார்.

“குடி பட்வா என்பது புத்தாண்டின் ஆரம்பம். புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான நாள் இது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொடிய கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி வருகிறோம், இன்று அந்த துயரம் மறைந்து வருவதாகத் தெரிகிறது.

ஒரு புதிய தொடக்கமாக, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமலில் இருந்த பேரிடர் மேலாண்மை சட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து செயல்பாடுகளும், கொரோனா ஊரடங்குக்கு முன்பாக இருந்தது போல இயங்கலாம்.

மேலும், மாநிலத்தில் அனைத்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், மால்கள், மல்டிபிளக்ஸ்கள், உணவகங்கள் மற்றும் பார்கள், விளையாட்டு மைதானங்கள், ஜிம்கள், ஸ்பாக்கள், நீச்சல் குளங்கள், ஆரோக்கிய மையங்கள், அழகு நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்தும் எவ்வித கொரோனா கட்டுபாடின்றி 100 சதவீத திறனுடன் செயல்படலாம்.

அதேநேரம் பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் முகக்கவசம் அணியலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

657 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன