சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

இலவச திட்டங்களால் இலங்கை போல் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்!

மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடந்துமுடிந்த மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள் பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை.
இத்திட்டங்கள் மூலம் இலங்கையில் ஏற்பட்டதை போல் பொருளாதார நெருக்கடி நம் நாட்டிலும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
391 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன