வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம் யாருமே திருடவில்லை பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’.சிவகார்த்திகேயன்.

உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம் யாருமே திருடவில்லை பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’.சிவகார்த்திகேயன்.

அறிவு என்ற கதாபாத்திரத்தின் உணர்வுபூர்வமான, உணர்ச்சிகரமான பயணம்தான் படம். ஒட்டுமொத்த வேலைக்காரர்களுக்கான படமாக இருக்கும். நாம் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். அந்தப் பணம் எங்கே போகிறது, யாருமே திருடவில்லை. அப்படியானால் என் பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’ என்கிறார் சிவகார்த்திகேயன்.


வேலைக்காரன் அனுபவம் குறித்து சிவகார்த்திகேயன் என்ன சொல்கிறார்…
இப்படத்தின் மூலமாக நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஃபகத் பாசில் எப்படி ஒரு காட்சியைப் புரிந்துகொள்கிறார், எப்படி நடிக்கிறார் என்று உன்னிப்பாகக் கற்றுக்கொண்டேன். இம்மாதிரியான படங்களை திரையுலகின் அனுபவப் பாடமாகப் பார்க்கிறேன். ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அப்படியொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார்.
விளம்பரங்கள் மூலம் மக்களிடையே ஒரு விஷயத்தைக் கொண்டுபோய்ச் சேர்கிறோம். ‘வேலைக்காரன்’ படத்தில் ஒரு முக்கியமான காட்சி என்னை பாதித்தது. எதையுமே யோசிக்காமல் விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கி, அந்தப் பொருட்களால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. அன்றைய தினம் விளம்பரம் மூலம் சம்பாதித்த பணமும் தவறாக தெரியும். அப்படி ஒரு எண்ணம் வந்தபோதே, உடனடியாக விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துவிட்டேன். அதை ஏன் மேடையில் சொன்னேன் என்றால், அனைவரின் முன்பும் கூறிவிட்டேன்.


வேலைக்காரன்’படத்துக்குச் சம்பளம் குறைவாகதான் வாங்கியுள்ளேன். பொன்ராம் இயக்கத்தில் நடித்துவரும் படத்துக்கு அட்வான்ஸ் மட்டும் வாங்கியிருக்கிறேன். 50 சதவீதம் படம் முடித்துவிட்டேன். அப்புறமாக வாங்கிக் கொள்ளலாம், தயாரிப்பாளரைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்ற எண்ணம்தான். ஆனால், இது ஆர்.டி.ராஜா சார் என்பதால் நம்பிக்கையாகச் சொல்ல முடியும். இதையே முன்னாள் படத்தின் தயாரிப்பாளர்கள் சரியாகச் செய்திருந்தால், அனைத்துத் தயாரிப்பு நிறுவனத்திலும் தொடர்ச்சியாக நடித்திருப்பேன். என்னுடைய மொத்த சம்பளத்தையும் வாங்கி ‘ரஜினி முருகன்’ படத்தை வெளியிட்டார்களே, அதைப் பற்றி ஏன் யாருமே பேசமறுக்கிறீர்கள் என்பது என் கேள்வி. சம்பளம் போக கடன் வாங்கி 50 லட்சம் கொடுத்தேன்.
வெளி தயாரிப்பாளருக்குப் படம் செய்ய மறுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இப்படியொரு விஷயம் நடந்தால் எப்படிப் படம் பண்ண முடியும். இத்தனைக்கும் என் படங்கள் மூலமாக லாபம் சம்பாதித்துவிட்டு கொடுக்கவில்லை என்னும்போது, நான் என்ன செய்வது? ஆகையால் இப்போது என் படத்தின் தயாரிப்பாளரைப் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. நாயகர்கள் சம்பளம் அதிகம், தயாரிப்பாளர்கள் யாரும் பணம் கொடுப்பதில்லை என்றும் சொல்லிவிட முடியாது என்கிறார் சிவகார்த்திகேயன்.

469 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன